« Home | தேர்தல் முடிவுபற்றி பாலகுமாரன் » | கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 » | திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 » | திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 »

நெருப்புக்கு நேரியனே

கவிஞர் அறிவுமதி.

ஊரார்கள் வலி வாங்கி
உள்ளுக்குள் நீ துடித்தாய்!
உருமறைத்த புலியாகி
உயிருக்குள் நீ சிலிர்த்தாய்!

பள்ளிக்குச் செல்லுவதை
படிப்படியாய் நீ குறைத்தாய்!
பதுங்குதற்கு முடிவெடுத்துப்
படங்களையும் நீ மறைத்தாய்!

விளையாடும் வயதினிலே
விளையாட்டைத் துண்டித்தாய்!
வீணர்களின் வெறிச்செயலை
வெடிகுண்டால் தண்டித்தாய்!

பாராண்ட மன்னர்களை
படிப்பகத்தில் சந்தித்தாய்!
பழந்தமிழர் புகழ்மீட்க
பண்போடு சிந்தித்தாய்!

எங்கென்ற ஏக்கத்தில்
இளைத்தாளே அன்புத்தாய்!
இவனன்றோ பிள்ளையென்று
இனித்தாளே ஈழத்தாய்!

ஈழத்தின் இருளழிக்க
எழுந்து வந்த சூரியனே!
ஈனத்தின் கருவழிக்க
இடிகிழித்த வீரியனே!

கண்ணிமைக்க மறந்துவிட்ட
கடுமுழைப்புக் காரியனே!
கண்டுசொல்ல கறையில்லா
நெருப்புக்கு நேரியனே!

இழந்திருந்த வீரத்தை
இழுத்து வந்து போட்டவனே!
சிதைந்திருந்த தமிழினத்தைச்
சேர்த்துவைத்து மூட்டவனே!

மரணத்தை மடியேந்தி
மாதாவாய்க் கேட்டவனே!
மறத்திமிரில் தமிழ்க்குடியின்
மானத்தை மீட்டவனே!

துளியளவும் நெறிபிறழா
தூயமனக் காவலனே!
துவண்டதமிழ் துளிர்க்கவென
தூக்கிவிடும் ஆவலனே!

தான்செய்த சிறுபிழைக்கும்
தண்டனைகள் ஏற்றவனே!
தாய்மானம் காப்பதற்காய்
தன்மானம் நூற்றவனே!

எவன் தமிழன் எனக்கேட்ட
இறுமாப்பை நீ உடைத்தாய்!
இவன்தமிழன் எனும்பெருமை
வரலாற்றை நீ படைத்தாய்!

இரக்கமற்ற தாயாகி
எம்பெண்ணை புலிசெய்தாய்!
அடுப்படியின் வரலாற்றை
அதனாலே பலிசெய்தாய்!

தாயுக்கும் மேலாகத்
தாயாகி வந்தவனே!
தலைநிமிர்வு ஊக்கத்தைத்
தமிழருக்குத் தந்தவனே!

உனக்கின்று பிறந்தநாள்!
எங்கள்உயிரோடும்
நரம்பெங்கும் உணர்வோடம் ஏறிவந்து
மூத்ததமிழ்த் தொன்மத்தை
மொண்டு மொண்டு ஊற்றி
எங்கள்முகம் கழுவிவிட்டவனே!
முகவரியும்தந்தவனே!

அன்பாண்டு அறிவாண்டு
ஆற்றல்மிகு வீரத்தில்
படையாண்டு
பண்டைய நம்பழுதில்லா
இயற்கை தமிழ்ப்பண்பாண்டு
பல்லாண்டு பல்லாண்டு
பாரிலுள தமிழர்களின்
மனமாண்டு வாழ்க
வாழ்கவென
மகிழ்ச்சியிலே வாழ்த்துகிறோம்
மாண்புமிகு எம் தலைவா!
வாழ்த்துகிறோம் எம் தலைவா!
---------------------------------------------
நன்றி:- தமிழ்நாதம்.

Labels: ,

போராளிப் பெண்களின் விடுதலை வேட்கையின் செயல்களால் சிதைந்த
அங்கங்களைக்கொண்டும் செயல்படும் தீரம் கண்டு,
திரையில் அங்கங்களை வர்ணித்து பாடல் எழுத மாட்டேனென்று உறுதியாய் முடிவெடுத்த கவிஞர் அறிவுமதி நீவிர் வாழ்க

மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அறிவுமதி.

நன்றி வன்னியன்

Post a Comment