« Home | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 » | திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 » | திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 » | திலீபனுடன் ஐந்தாம் நாள் -19-09-1987 » | திலீபனுடன் நான்காம் நாள் -18-09-1987 »

திலீபனின் இறுதி உரையிலிருந்து...

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். ...எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். நன்றி!"


_____________________________________________

Labels: , ,

மனசு அதிர்வது போல, தலைக்குள் ஏதோ ஒரு கிறுகிறுப்பான உணர்வு தோன்றுவது போல
இதை வாசிக்கும் போது உணர்கிறேன்.

வன்னி,
பதிவுக்கு மிக்க நன்றி.

//எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். //

தியாகச் செம்மல் திலீபனின் இறுதி ஆசையை நனவாக்குவதுதான் நாம் அந்த மாவீரனுக்குச் செய்யும் கைமாறு. "ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி" எம் தலைவன். அவரது கைகளைப் பலப்படுத்துவதே நாம் இன்று செய்ய வேண்டிய தலையாய கடமை.

சந்திரவதனா,
வருகைக்கும் உணர்வான கருத்துக்கும் நன்றி.

வெற்றி,
வருகைக்கு நன்றி.

Post a Comment