« Home | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 »

ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி?

மறுபக்கம்: கோகர்ணன்

ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் பரிசு கிடைத்துள்ளது பற்றி கொண்டாடக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நடுநிலையான முடிவுகளின் படி கிடைப்பதில்லை என்பதையே. பொருளியலுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளியப் பொருளியலின் நியாயங்களை ஏற்போருக்கே கிடைத்துள்ளன. அமர்த்யா சேனுக்குப் பரிசு கிடைத்தபோது அதுபற்றி மூன்றாமுலகிலும் முக்கியமாக இந்தியாவிலும் பெருமகிழ்ச்சி காணப்பட்டது.பொருளியல் விருத்திக்கு ஒரு மனித மேம்பாட்டு வளர்ச்சிப் பரிமாணத்தை வழங்கியதற்காக அவர் மெச்சப்பட்டார். எனினும், முற்றிலும் முதலாளிய மறுப்பான மாற்றுப் பொருளியல் சிந்தனையாளர் எவரும் இதுவரை நொபல் பரிசு பெறவில்லை என்றே நினைக்கிறேன்.

சில விருதுகள் பற்றி அதிக இரகசியம் இல்லை. அவற்றுக்கான அரசியல் தகுதிகள் வெளி வெளியாகவே தெரிந்தவை. அந்தளவுக்கு அவை நேர்மையானவை. நடுநிலை,நீதி, நியாயம் என்கிற பேர்களில் வழங்கப்படுகிற அநீதியான, அநியாயமான பக்கச்சார்பான முடிவுகள் பற்றிப் பல சமயங்களிலும் உண்மைகள் வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனந்தசங்கரிக்கு கிடைத்த பரிசு பற்றி யுனெஸ்கோவுக்கு ஆட்சேபனை மனுக்கள்போவது பற்றி அறிந்தேன். அவை எதையும் மாற்றப்போவதில்லை. அந்தப் பரிசு தவறுதலாக வழங்கப்பட்டது என்றால் அல்லவா அது மீளாய்வுக்குட்படும்? அவரை அப்பரிசுக்கு யார் பரிந்துரைத்தாரென்று எனக்குத் தெரியாது. எனினும், தெரிவுக் குழுவில் இருந்தவர் முன்னாள் இந்தியப் பிரதமர் குஜ்ரால். குஜ்ராலின் அரசியல் அவருக்கு முன்பு, அதே கூட்டணியின் பிரதமராயிருந்த வி.பி.சிங், தேவகௌடா ஆகியோருடையதைவிட ஈழத் தமிழர் பற்றி அனுதாபக் குறைவானது. தேவ கௌடாவைப் பதவி விலக்குவதிலும் குஜ்ராலுக்கு ஒரு பங்கிருந்தது. விடுதலைப் புலி எதிர்ப்பைக் கடுமையாக கடைப்பிடிக்கிற பிரமுகர்களில் குஜ்ரால் ஒருவர். பொதுமக்களிடையே செல்வாக்கு குறைவான ஒருவர் என்றாலும் டில்லியில் மேலிடத்துச் செல்வாக்கு உள்ளவர். தெரிவுக் குழுவில் குஜ்ரால் இருந்ததற்கும் ஆனந்தசங்கரிக்குப் பரிசு வழங்கப்பட்டதற்கும் தொடர்பே இல்லாமலிருக்கலாம். ஆனாலும் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.

ஆனந்தசங்கரி அமைதிக்கும் புரிந்துணர்வுக்காகவும் ஆற்றிய பணிக்காக யுனெஸ்கோ பரிசு என்றால் உண்மையில் அப்பரிசுக்கு அவரை விடப் பன்மடங்கு தகுதியான சிங்கள அரசியல்வாதிகளை என்னால் அடையாளங் காட்ட முடியும். மேற்படி பரிசு உண்மையிலேயே ஆனந்தசங்கரியின் பங்களிப்பு இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உதவும் நோக்கிலானது என்றால், அவர் எந்தளவு தூரத்துக்கு போரிடும் இரண்டு தரப்புகளையும் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு நல்லதொரு விடை தேவை. இரண்டு தரப்பினரும் செய்கிற நியாயமற்ற செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் சமநோக்கிலிருந்து கண்டித்தாரா என்ற கேள்விக்குச் சரியான விடை தேவை. இன்றைக்கு ஆனந்த சங்கரியை ஹெல உறுமய மெச்சுமளவுக்கு, ஐலன்ட், திவயின பத்திரிகைகள் மெச்சுமளவுக்கு, ஜே.வி.பி. மெச்சுமளவுக்கு தமிழ் மக்களுக்காக இரங்கக்கூடிய எவராவது மெச்சுவதாகத் தெரியவில்லை. அவரது அறிக்கையின் ஒரு காலத்தில் "மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)" என்கிற பேரில் ஓரிவர் வெளியிட்டு வந்த அறிக்கைகளைவிடப் பேரினவாத ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன. அவர் விடுதலைப் புலிகளை வெறுக்கத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம், அரசியல் காரணங்கள் இருக்கலாம். அவருக்கு அதற்கான பூரண உரிமை உண்டு. அவை மதிக்கப்பட வேண்டும். அதேவேளை, அவரைத் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். அதை அவர் மதித்து ஏற்க வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற பட்டத்தைப் பயன்படுத்த அவருக்கு இந்த நாட்டின் ஊழல் மிக்க நீதித் துறையினூடாக சட்டப்படி உரிமை இருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கான தார்மிக உரிமை சிறிதும் இல்லை என்பது அவருக்கே தெரிய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயற்குழு அவரைப் பதவி நீக்குவதிற் காட்டிய நியாயமற்ற அவசரம் காரணமாகவே அவரால் தனது பதவியைப் பிடித்து வைத்திருக்க இயலுமானது. வேறெந்தக் கட்சியிலும் இம் மாதிரி நடந்திருந்தால் நீதிமன்றம் வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

செஞ்சோலைப் படுகொலை பற்றிப் பேசுகையில், கொல்லப்பட்டோர் விடுதலைப் புலிப் போராளிகள் என்று அவரால் அறிக்கை விட முடிகிறது. மூதூர் படுகொலைகளைச் செய்தவர்கள் யாரென்று அவர் அறியார். அண்மைய நிந்தவூர் படுகொலைகளைப் பற்றியும் கண்டித்துப் பேசிய அதேவேளை, யார் இந்த நீசத்தனத்தைச் செய்தார்கள் என்பது சரியாக விசாரித்தறியப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். இவற்றுக்கு முந்திய பல படுகொலைகள் பற்றிய அவரது நிசப்தம், பலரது செவிப் பறைகளை அதிரவைத்திருக்கும்.

சில விஷயங்கள் பற்றி அவர் காட்டுகிற நிதானமும் அமைதியும் வேறு சில பற்றிய அவரது அவசர முடிவுகளும் நமக்கு வியப்பளிக்கின்றன. இராணுவத்தலைமையகத் தற்கொலைத் தாக்குதல் பற்றி இன்னமும் சரியான தகவல்கள் இல்லை. கெப்பித்திக்கொல்லாவ படுகொலைகள் பற்றியும் தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீது சந்தேகப்பட ஒருவருக்குப் போதிய நியாயமும் உரிமையும் இருக்கிறது ஒரு விடயம். அமைதிக்காகவும் புரிந்துணர்வுக்காகவும் பாடுபட்டதற்காகப் பரிசு பெறுகிற ஒருவர், விடுதலைப் புலிகளே அவற்றைச் செய்தனர் என்று குற்றஞ் சாட்டுகிறது தகுதியான நடத்தையா என்பது இன்னொரு விடயம்.

யுனெஸ்கோ தெரிவுக் குழுவில் இருந்த எல்லாருக்கும் இலங்கை அரசியலின் சகல நெளிவு சுழிவுகளும் தெரிந்திருக்க நியாயமில்லை. அதை விடத் தனது அரசியல் முக்கியத்துவத்தை இப்போதே இழந்து விட்ட ஓர் அரசியல் வாதியின் அரசியல் நடத்தை பற்றி அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. என்றாலும் குஜ்ரால் போல ஒருவர் அதை அறியாமலிருக்க மாட்டார். ஏனெனில், இந்தியாவின் ஆணைக்குட்பட்டுச் செயற்பட்டு வந்த ஒவ்வொரு அரசியல் வாதியினது அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அதிகார நிறுவனம் அறியும். குஜ்ரால் அரசியற் குழந்தை அல்ல. அவர் எதையுமே தெரியாத்தனமாகச் செய்ய நியாயம் இல்லை.

யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு கரம். ஐ.நா. சபையைப் போல அதற்கும் ஓர் அரசியல் இருக்கிறது. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காக அவை நாடகமாடுகின்றனவே ஒழிய, வல்லரசுகளின் நலன்கட்கு எதிராக அவை எதையும் செய்ததில்லை. பல்வேறு பிராந்திய மேலாதிக்கச் சக்திகளது செல்வாக்குக்கு அங்கே இடமுண்டு. ஏகாதிபத்திய நலன்கட்கு வசதியாக இல்லாத எந்தக் கிளர்ச்சிக்கார அமைப்பிற்கும் அங்கே இடமில்லை. யுனெஸ்கோ மிக அருமையாகவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பாக உண்மையான நிலைமைகளை அறிந்து கவலை காட்டியிருக்கிறது. உண்மையில் அது இன்னொரு என்.ஜி.ஓ. நிறுவனம் மட்டுமே.

த.வி.கூ. தலைவர் என்கிற கேள்விக்குரிய தகுதியை விட அதுவும் போக ஏதோ ஒரு சூழலில் பறிக்கப்படக் கூடியதான அந்தத் தகுதியை விட, நிலையான ஒரு தகுதியை யுனெஸ்கோ அவருக்கு வழங்கியிருக்கிறதென்றால் நாம் எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் மீது நாம் வைத்திருக்கிற மூட நம்பிக்கை பற்றி நாம் கவலைப்பட வேண்டாமா?

எத்தனையோ தகுதியற்றவர்கட்கு வழங்கப்பட்ட பரிசுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நாம், ஏன் பத்தோடு பதினொன்றாக இந்த ஒன்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்? இங்கே பிரச்சினைக்குரியவர் ஆனந்தசங்கரியல்ல. பிரச்சினைக்குரியவை மேலாதிக்க அரசியல் நோக்கங்கட்காகப் பரிசுகளை வழங்குகிற நிறுவனங்கள் தாம். எனவே, ஆனந்தசங்கரிக்கும் அப்பால் நமது தேடல் விரிவடைய வேண்டும்.

__________________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 01, 2006

_____________________________________________

Labels:

நல்ல கட்டுரை.
வெளிப்படுத்தியதற்கு நன்றி.

அடுத்த சிறந்த நடிகர் (நகைச்சுவை வேடத்தில்) விருது சங்கரியாருக்காம், ஏற்கனவே முடிவும் செய்துவிட்டார்களாம்.

உண்மைத்தகவல்கள் நன்றி

எழுதிக்கொள்வது: inthiyan

ஆனந்தசங்கரி விடுதலைபுலிகளை ஆதரிக்கவில்லை அதனால் தான் அவருக்கு வழகிய விருது சரியில்லை... இதே தீவிரவாதிகளின் தலைவன் பிரபாகருக்கு கொடுத்திருந்தால் அது நல்ல நேர்மையான விருது தானே

21.48 7.10.2006

ஆனந்தசங்கரி தீவிரவாதி தலைவன் பிரபாகரக்கு எதிராக இருததால் அந்த விருது நேர்மையானது இல்லை....

தீவிரவாதி பிரபாகரன் போடும் பிச்சை பணம் வாங்கும் பாரதிராஜா அல்லது இந்தியாவிற்க்கு (தாய் நாட்டுக்கு) துரோகம் செய்யும் எந்தாவது ஒரு நாய்க்கு கொடுத்துயிருந்தால் அது உங்களை போன்றவர்கள் அதி நேர்மை என்பீர்...

முதல் இரண்டு அனானிகள்,
கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஐயா இந்தியன்,
(இதைச்சொல்ல நீர் இந்தியனாக இருக்க வேணுமெண்டதில்லை)
பிரபாகரனுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விருது குடுப்பார்களா எண்டது ஒருபுறமிருக்கட்டும்.
முதலில் யாரைப்பார்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்?
என்னையா? அல்லது பேராசிரியர் சிவசேகரத்தையா?

சரி, பிரபாகரனை எடுத்துக்கொண்டால் அவருக்குச் சம்பந்தம் இருக்கிறது. எப்படி நெல்சன் மண்டேலா ஒருதரப்பின் தலைவனாக இருந்தாரோ எப்படி யாசீர் அரபாத் ஒருதரப்பின் தலைவனாக இருந்தாரோ அப்படித்தான் பிரபாகரனும் சம்பந்தப்பட்ட ஒருதரப்பின் தலைவன்.
ஆனால் ஆனந்தசங்கரி யார்?
அவருக்கும் சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் சமாதானத்துக்காக என்ன செய்தார்?
நான் கேட்பதைவிடவும் மேலுள்ள கட்டுரையில் நிறையக் கேள்விகள் இருக்கு. முடிஞ்சால் பதில் தாங்கோ.

சொல்லாமல் விட்டது,
பிரபாகரனுக்கு இப்படி விருது கிடைத்தால் நான் தூக்கிவைத்துக் கொண்டாடப்போவதில்லை. அப்படிக் கொண்டாடினால் எங்கள் இனத்தை அழிக்க விருது கொடுப்பவர்கள் செய்த செயல்களை நியாயப்படுத்துவது போலாகிவிடும்.

Post a Comment