« Home | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் » | வை.கோ.வின் உரை » | இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு » | யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் » | தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். » | இலங்கைத் தேர்தலில் வென்றது யார்? » | இலங்கைத் தேர்தலும் தமிழர்களும். » | நெருப்புக்கு நேரியனே » | தேர்தல் முடிவுபற்றி பாலகுமாரன் » | கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? »

தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர்.

திருமலைச்சம்பவத்தில் நடந்ததென்ன?

சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்த மாணவர் ஒருவரின் தந்தை முன்னே 5 அப்பாவி மாணவர்களையும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

"அவசரகால சட்டத்தைப்பயன்படுத்தி அரச படைகளும் பேரினவாதக் காடையர்களும் கூட்டுச் சேர்ந்து நடத்திய சதியே ஐந்து மாணவர்களின் படுகொலையாகும்.
இத்தகைய படுகொலைச் சம்பவங்கள் அரச படைகளால் மேற்கொள்ளப்படும் என்று அச்சம் தெரிவித்திருந்தோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் தராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மீண்டும் மீண்டும் எமது மண்ணில் இராணுவத்தைக் கொண்டு வந்து குவித்ததோடு மட்டுமன்றி அவரகாலச் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கணக்கிலெடுக்காது சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் சோதனை நடவடிக்கைகளையும் அனாமதேய கைதுகளையும் நடத்திக் கொண்டுள்ளனர்.

"இச்சம்பவம் நடைபெற்றபொழுது சம்பவ இடத்திலிருந்து ஐம்பது மீற்றருக்கு உட்பட்ட தூரத்தில் சிறிலங்கா கடற்படையினது நான்கு சோதனைச் சாவடிகளும் இருந்துள்ளன.
அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அக்கு வேறு ஆணி வேறாக கழற்றப்பட்டு சோதனை செய்யப்படுகிற நிலையில் ஓட்டோவில் வந்து கைக்குண்டை வீசிவிட்டு எப்படித் தப்பிச் செல்ல முடிந்தது? என்பதை சிறிலங்கா அராங்கம் சர்வதேத்திற்குச் சொல்ல வேண்டும்.

"அது மட்டுமின்றி 07.30 மணிக்கு கைக்குண்டு வீசப்பட்ட பின்பு கைது செய்யப்பட்ட அப்பாவி ஐந்து மாணவர்களும் ஒருவரது தந்தையின் கண் முன்னாலேயே 07.44 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

"07.30 மணிக்கு கைது செய்யப்பட்ட மாணவன் தனது தந்தைக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் தான் கைது செய்யப்பட்ட விடயத்தைத் தெரிவித்து உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன் பின்பே அந்த மாணவரின் தந்தையார் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார். சென்றவரை அவ்விடத்திற்குச் செல்லவிடாது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த போதுதான் அவர் கண் முன்னாலேயே இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

"எனவே உண்மை இப்படியிருக்க அரச ஊடகங்களும் சிறிலங்கா படைகளும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி அப்பாவி ஐந்து மாணவர்களுக்கும் புலிச்சாயம் பூசியுள்ளனர்.

"1983, 1984, 1988 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எவ்வாறு திருகோணமலை மண்ணில் அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டு சிறிலங்காவினது கடற்படை திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டதோ அதே அட்டூழிங்கள் அதே பாணியில் மீண்டும் அதே கடற்படையினரால் 2006 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டுள்ளது."

என்றுகூறும் அவ்வறிக்கை தொடர்ந்து செல்கிறது.
-------------------------------------
செய்தி: புதினம்.
-------------------------------------

அச்சம்பவத்தில் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோட முயற்சித்து, சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரு மாணவர்களின் வாக்குமூலங்களும் என்ன நடந்ததென்று தெளிவாகச் சொல்கின்றன. அவர்களினதும், கொல்லப்பட்ட மாணவனின் தகப்பனினதும், இன்னும் அப்பகுதி மக்களினதும் கருத்துக்களையும் வாக்குமூலங்களையும் புறந்தள்ளி, மறைத்து, இருட்டடிப்புச் செய்கின்றன பெரும்பாலான ஊடகங்கள். அதைவிட கொல்லப்பட்டவர்களைப் புலிகளாக்கிவிட்டன சில ஊடகங்கள். கொல்லப்பட்டவர்கள் புலிகள்தானென்று ஒப்புக்கொண்டால்தான் உடல்களைத் தரப்படுமென்று கட்டாயப்படுத்தல்கள் வேறு.

Labels: , ,


Get your own calendar

Links