« Home | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். » | தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர். » | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் » | வை.கோ.வின் உரை » | இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு » | யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் » | தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். » | இலங்கைத் தேர்தலில் வென்றது யார்? » | இலங்கைத் தேர்தலும் தமிழர்களும். »

இலங்கையில் இந்தியத் தூதுவராலயம்

மறுபக்கம் - கோகர்ணன்


ஒரு வியாபாரி ஒரு படகில் பயணஞ்செய்த வேளை, கடுமையான புயற்காற்று மூண்டது. படகு அலையில் தத்தளித்தது. இப்படியே போனால் படகு கவிழ்ந்து விடுமோ என்ற பயம் வியாபாரிக்கும் படகோட்டிக்கும் ஏற்பட்டது. படகோட்டி மெல்லிய குரலில் கடவுளை வேண்டிக்கொண்டான். வியாபாரிக்கு வழிபாட்டுக்கு நேரமும் இருந்ததில்லை. எதையும் கடவுளிடம் வேண்டியும் பழக்கமில்லை. படகோட்டியிடம் "என்ன வேண்டிக் கொள்கிறாய்?" என்று கேட்டான். `இந்தப் புயலிலிருந்து என்னையும் படகையும் காப்பாற்றினால் வெள்ளியால் ஒரு விளக்குச் செய்து கோவிலுக்குக் கொடுப்பேன்' என்று சொன்னதாகப் படகோட்டி சொன்னான். "என்ன நீ முழு மடையனாக இருக்கிறாய். உயிருக்கே ஆபத்தான இந்த நேரத்தில் வெள்ளி என்ன வெள்ளி, தங்கத்தால் செய்து தருகிறேன் என்று சொல்லக்கூடாதா?" என்று வியாபாரி கடிந்து கொண்டான். "வெள்ளியால் செய்து கொடுப்பதே பெரும்பாடு. தங்கத்துக்கு எங்கே போவேன்?" என்று படகோட்டி விளங்கப்படுத்தினான். "இதோபார் உனக்கு இப்போது காரியமாக வேண்டும். தங்கத்தால் செய்து தருகிறதாகச் சொல்லு. தப்பிக் கரை சேர்ந்த பிறகு வெள்ளியிலோ, பித்தளையிலோ வசதியானபடி செய்து கொடு. கொடுக்காவிட்டால்தான் என்ன?" என்று வியாபாரி சொன்னான் என்பதுதான் கதை.

படகோட்டி என்ன செய்தான் என்றோ இருவரும் உயிர் தப்பினார்களா என்றோ எனக்குத் தெரியாது. யாராவது ஒருவர் தப்பியிராவிட்டால் கதை நமக்குத் தெரிய வந்திராதல்லவா?. அது போகட்டும்.

நம்முடைய சனாதிபதிக்கும், நம்முடைய வியாபாரி படகோட்டிக்கு ஆலோசனை சொன்னது போல தேர்தலுக்கு முன்னம் யாராவது ஆலோசனை சொன்னார்களோ தெரியாது. சொல்லியோ சொல்லாமலோ ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அதற்கும் மேலாக, ஜே.வி.பி.யிடமும் ஹெல உறுமயவிடமும் பல நேர்த்திக் கடன்களையும் வைத்துக் கொண்டார். இப்பொழுது காப்பாற்றுகிற ஒவ்வொரு வாக்குறுதிக்கும் நூறு வாக்குறுதிகளுக்குக் கையை விரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்காக இரக்கப்படுவதாவென்று தெரியவில்லை.

என்றாலும் கடவுள் கூடக் காட்டாதளவு சகிப்புத்தன்மையை ஜே.வி.பி. ராஜபக்‌ஷவுக்குக் காட்டுகிறது என நினைக்கிறேன். அவர்கள் கொஞ்சம் முணுமுணுக்காமல் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு அரசாங்கம் கவிழாமல் கவனித்துக் கொள்கிற ஒரு தேவை இருக்கிறது. முந்நூற்றைம்பது ரூபாவுக்கு ஒருமூடை உரம் வழங்குகின்ற வாக்குறுதியைச் சனாதிபதி கொள்கையளவிலாவது நிறைவேற்றியதால் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியைப் பெற்று அதன் பின்னால் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பிடிக்கலாம் என்ற யோசனையில் ஆளுங்கட்சியும் கூட்டாளியான ஜே.வி.பி.யும் உள்ளதாலேயே அவர்களிடையில் இன்னமும் ஒரு சமாதான உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன்.

இல்லாவிட்டால், எல்லாரையும் அமைச்சராக்கி எல்லாருக்கும் எல்லாச் சொகுசுகளையும் வழங்க உடன்பட்ட ஜனாதிபதியை இவ்வளவு தூரம் விட்டு வைத்திருப்பார்களா?

நோர்வேயைச் சமாதான முயற்சிகளிலிருந்து விலக்குவதாகச் சொல்லி விட்டு இப்போது நோர்வே விதித்த நிபந்தனைகற்கேற்பவே நோர்வேயின் பங்குபற்றல் அமையும் என்கிற நிலைமைபற்றிப் பேசாமல் இருப்பார்களா?

ஜே.வி.பி.யையும் வேறு சில தீவிரவாதிகளையும் மகிழ்விக்க மகிந்த ராஜபக்‌ஷ எடுத்த முயற்சிகள் நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தான் என் ஊகம்.

ஆறுமுகன் தொண்டமானையோ சந்திரசேகரனையோ ரவூப் ஹக்கீமையோ அணுகவிடாதது என் கருத்தில் மெச்சத்தக்க ஒரு விடயம். வேறு ஒட்டுண்ணிகளையும் அவர் பதவிகளிலிருந்து கழற்றி விட்டிருந்தால் இன்னுஞ் சிறப்பாயிருந்திருக்கும். எனினும், அவர் எடுத்த முடிவுகள் சரி பிழைகளின் அடிப்படையில் இல்லாமல் பாராளுமன்ற அதிகாரச் சமன்பாடுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன என்பது தான் அவருக்குப் பிரச்சினையாகப் போகிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ இ.தொ.கா.வைப் பிளவுபடுத்துகிற வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் என்பதில் உள்ள உண்மையைவிட, ஆறுமுகன் தொண்டான் இ.தொ.கா.வைப் பலவீனப்படுத்தியிருக்கிறார் என்பதில் உண்மை அதிகம். பதவிக்காகவும் வசதிக்காகவும் சலுகைகற்காகவும் கட்சி தாவுவதில் இ.தொ.கா. தலைமையில் எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் தாம். அண்மையில் ஆளுக்காள் ஊழல் குற்றஞ்சாட்டியதைவிட மோசமாக எவரும் அவர்கள்மீது குற்றஞ்சுமத்தியதில்லை. இது இ.தொ.கா.வின் அவலம்.

இ.தொ.கா. தலைவர் விடுதலைப் புலிகளிடம் பேசப் போனதன் மூலம் அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல் முடிந்த பின்பு தூதரகத்துக்கும் இந்தியாவுக்கும் போய் வந்தும், அவர் நினைத்தது கிடைக்கவில்லை. அதுவும் போதாமல் அவரை ஒரு பொருட்டாகவே ஜனாதிபதி கருதவில்லையென்பதுதான் அவரது ஆதங்கம். இந்தியாவின் தரகு வேலை எடுபடாததும் ஒரு கவலை.

இந்திய உயர்ஸ்தானிகரின் ராஜதந்திர மதிநுட்பம் பற்றிய ஐயங்களை எழுப்புகிற விதமாகவே அவர் அண்மையில் நடந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஒரு தூதரகத்தின் பணி ஒருநாட்டின் உள்அலுவல்களில் குறுக்கிடுவதல்ல. சில தூதரங்கள் இந்த விதியைக் கடைப்பிடிப்பதில்லை. நம் விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் மிகப் பெரிய குற்றவாளிகள். இந்தியத் தூதரகம் தனது குறுக்கீட்டை மிகவும் அப்பட்டமாகவே பல காலமாகச் செய்து வருகிறது. எனவே, இது ஒரு குறிப்பிட்ட உயர்ஸ்தானிகரது பிழையென்று கூற முடியாது.

என்றாலும், வன்னிக்குப் பிந்திய ஆறுமுகன் தொண்டமானுடனான சந்திப்பின் பின்பு, ஜனாதிபதியை இந்தியத் தூதரகத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார். தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காட்டவோ, தேநீர் விருந்துக்கோ அழைத்தாரென நான் நம்பவில்லை. அதற்கான இடம், அவரது வதிவிடமாக இருப்பது கூடப் பொருத்தமாயிருந்திருக்கும். அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆறுமுகன் தொண்டமான் விடயமாகப் பேசினார்களா என்பது கூட முக்கியமானதல்ல.

ஒரு தூதர் தன்னுடைய அலுவலகத்துக்கோ இருப்பிடத்துக்கோ யாரை என்ன அடிப்படையில் அழைப்பது என்பதற்கான சில நடைமுறைகளும் எழுதிய விதிகளும் உள்ளன. இப்போது அவை மீறப்பட்டுள்ளன. அதனால் இந்த நாட்டின் சனாதிபதி அவமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த அழைப்பை ஏற்றதன் மூலம் சனாதிபதி தன்னை மட்டுமன்றி இந்த நாட்டின் இறைமையையும் அவமதிக்க உடன்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்க ஒரு மீறல்.

இந்த நாட்டின் எழுதப்பட்ட வரலாற்றில் இங்கு அனுப்பப்பட்ட முதலாவது அயல் அரச தூதுவர் ஒரு சமயத் தூதுவராக இருந்தார். அந்தத் தூதின் அரசியல் பரிமாணங்களைவிட புத்த மதப் பரப்புதலுக்கு வரலாற்றாசிரியர்கள் கூடிய முக்கியம் வழங்கியுள்ளனர். எப்படியோ அது இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. புத்த சமயத்தின் வருகையை இந்த நாடு எவ்வளவு நல்ல விதமாகப் பயன்படுத்தியதென்பது இன்னொரு விடயம்.

இராமாயணத்தை தாங்கள் நம்புவதென்றால் அந்த இராமாயண இலங்கை இந்த நாடாக இருந்தால் இங்கு அனுப்பப்பட்ட முதலாவது தூதன் வாலில் கட்டிய நெருப்பைக் கொண்டு முழு நாட்டையுமே தீயிலிட்டது தான் முதலாவது இலங்கை இந்திய இராஜதந்திர அனுபவம். அது அவ்வளவு இனிய அனுபவமாயிருந்திருக்காது.

அனுமனுடைய குரங்குத்தனமும் ராமனுடைய அதிகாரத்தின் பிரதிநிதி என்ற திமிரும்தான் இந்தியத் தூதர்கள் பின்பற்றுகிற இராஜதந்திர நடைமுறையா என்று நம்மைக் கேட்கத் தூண்டுகிற விதமாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடந்துகொள்ளக் கூடாது என்று கேட்க நமக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றையும்விட, இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்பதில் இந்திய அரசாங்க வற்புறுத்தல்கள் நிறுத்தப்படுவது முக்கியமானது. இந்தியாவில் உள்ளதுபோல `சமஷ்டி' இந்தியாவின் தேசிய இனப்பிரச்சினைக்குப் போதுமானதாயிருக்கலாம். ஆனாலும், அதன் போதாமைகள் காலப்போக்கிற் புலனாகி வருகின்றன. இலங்கை இன்னொரு நாடு. அதன் தேசிய இனப்பிரச்சினையின் வரலாறு இந்தியாவின் தேசிய இனப் பிரச்சினை வரலாற்றின் எப்பகுதியின்றும் வேறுபட்டது. எனவே, இலங்கைக்கு ஏற்றது எது என்பதைச் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களே முடிவு செய்யட்டும். எதை அனுமதிப்பது எதை அனுமதிப்பதில்லை என்று இந்தியா சொல்வதற்கும் அமெரிக்கா கியூபா பற்றியும் பின்புலத்தின் அமெரிக்க நாடுகள் பற்றியும் கட்டளைவிடுவதற்கும் அதிக வேறுபாடில்லை.

அனைத்திலும் முக்கியமாக இந்தியாவினதோ அமெரிக்காவினதோ ஆணைகளைக் கேட்க வேண்டிய நிலையில் இந்தநாட்டைத் தொடர விடாதிருப்பது ஜனாதிபதியின் தலையாய கடமை.
-----------------------------
நன்றி: தினக்குரல்

Labels:

எழுதிக்கொள்வது: theevu

//இராமாயணத்தை தாங்கள் நம்புவதென்றால் அந்த இராமாயண இலங்கை இந்த நாடாக இருந்தால் இங்கு அனுப்பப்பட்ட முதலாவது தூதன் வாலில் கட்டிய நெருப்பைக் கொண்டு முழு நாட்டையுமே தீயிலிட்டது தான் முதலாவது இலங்கை இந்திய இராஜதந்திர அனுபவம். அது அவ்வளவு இனிய அனுபவமாயிருந்திருக்காது.//


அன்று மட்டுமல்ல பினனர் தூதராய் வந்த ரமேஸ் பண்டாரி அன்றைய ஜனாதிபதி ஜே ஆரிடம் தனது மனைவிக்கு வைர நெக்லஸ் அன்பளிப்பாய் வாங்கி, வந்த கதையை மறந்தது வரை தொடர்ந்நது.


11.1 10.1.2006

Lanka is also spotted near Chandipur Island Coast in Orissa,India as they say. This is in the visinity and closer to the West Bengal Coast forests like Sundarban(Sundara vanam) In Thamizh - Sadhuppu Nila Kadugal. As the Bay of Bengal is only a Bay, at these areas the sea water is only knee deep level, and can walk the distances to near by islands with forests. Hope Mr Hanuman might have jumped through these islands only.

Sita's place in Bihar and Rama's place in East Uttar Pradesh of India and this place in Orissa and the forests adjusent to West Bengal/East Bengal(Bangladesh) are all close interstates in the Easter Province of the Indian continent. Even Ravanna ( We jovially call as 'Rao Anna' may be his first name is Das sari (Das= 10, sar=head...Dassari=Ten headed, Head --hear may mean crowns?
(Dassari Rao Anna) again may be of Andhra Pradesh of India (where Rao is title for one of the high castes, say Brahmin)

So what to say about this Sri Lanka - this is a big island and may not have relavance to Ramayana's lands. May be having relavance to Kerala(old Tamil - ie. Malayalam speaking area where still have Ezhavas engaged in Fishing / rearing Elephants) including culture and behaviours.
Singhalam is also seems to have relavance with the Karnataka Tamizh + Maratti Mozhi + Sourashtra Mozhi (that is the present Sanga Thamizh developed at Madurai(Then Pondy - ie. Madura hai).

The two provinces are seems to be separate identity with different lankas. In northern part of India any tiny land in the middle-of-the- water is denoted as Lanka in collaquel language, as they use as Dheev(Deu) means island in Sanskrit. In Tamilzh such lands in middle of water is called as 'Mannar'(Mann=Sand, Aar=River)

Ramayana has more impact in the culture of the Eastern Province of India including the east most part of the vast land like Manipur, Nagaland & touching even Malaysia
where even dramas/street plays are played on Ramayana, rather than other provinces that too in Southern province.

The so impact is seen lacking in other provinces of India ie. Northern, Western, Middle and Southern provinces. This is applicable for the impact on the Hero Worship towards Hanuman, too, among people of those respective provinces.

So people should depend and decideon facts based on real history in any case and not on assumptions. The geographical factors explained in Ramayana needs thorough investigations of area of land where it has taken place.

I developed the inclination to talk on the notion arrived in my mind while travelling through all these lands several years ago. I expressed it now, when I read the comments published in Tamizh Language in blogger site.

Post a Comment

Get your own calendar

Links