« Home | ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும். » | இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் » | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். » | தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர். » | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் » | வை.கோ.வின் உரை » | இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு » | யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் » | தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். »

மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம்

திருகோணமலை மூதூரில் நேற்று (10.01.2006) அன்று தமிழ்த் தேசியப் பிரகடன நிகழ்வு நடைபெற்றது. இதில் ஐம்பதாயிரத்துக்குமதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு எனப் பல இடங்களில் இவ்வாறான பிரகடனங்கள் நடைபெற்றுள்ளன.


இந்நிகழ்வில் தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனத்தை படையணி பொறுப்பாளர் பிரபாகரன் வெளியிட்டார்.

அப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனியும் யோசிக்க என்ன இருக்கின்றது. ஒன்றும் இல்லை. ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை அமைப்பதென்பது.

சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம். எத்தனை வருடங்கள் ஏமாற்றப்படுவது?

50 வருடங்களுக்கு மேலான போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடலாமா? பம்மாத்து நாடாளுமன்றத்தில் சாத்வீக போராட்டங்கள் சாதித்தது என்ன. உயிரினையும், உறவுகளையும் உடைமைகளையும் இழந்ததுதான். திட்டமிட்ட இன அழிப்பினால் இலங்கை உச்க்கட்டத்தில் நின்றதனை நாம் கண்டோம். குட்டக் குட்ட குனியும் மடையர் என நினைத்தவர்களை தட்டிக்கேட்டது எமது புதல்வர்களது கரங்களில் ஏந்திய ஆயுதங்கள் பட்டொழிந்து போவதைவிட தட்டிக் கேட்டு வெட்டிச் சரித்து சரித்திரம் படைத்த போதுதான் தட்டிக் கழிக்க முடியாது சமரசம் பேச வந்தான் எமது எதிரி.

சர்வதேமும் உற்றுப் பார்த்து உணர்ந்து கொண்டதால் விட்டுக் கொடுப்பு சமாதான தேவையுடன் சரியென வந்தனர் எமது வீரப்புதல்வர்கள், ஆனால் திட்டமிட்ட சதிகளுடன் எம் எதிரிகள் திசை மாறி சென்று விட்டனர்.

சமாதானத்தை உச்சரித்துக் கொண்டு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் யுத்தநிறுத்த மீறல்களிலும் தனது இராணுவத்தை ஈடுபடுத்திக் கொண்டும் சர்வதேத்தை ஏமாற்றிக் கொண்டும் இருக்கின்றனர்.

சர்வதேம் எங்கும் எம் வீரப்புதல்வர்களின் பலம் உணர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் வெறிபிடித்த சிறிலங்கா இராணுவத்தினதும் அரசினதும் பேரின வெறி பெரிதாக தொடரவே செய்கின்றது.

அரிய தியாகத்தினால் எமது மண் அகிலம் வியக்கத்தக்க வகையில் தலை நிமிர்ந்துள்ளது. எமது படை சகல மக்களின் வாழ்வுக்காக, சமாதானத்துக்காக தலைசாய்த்து நிற்கிறது. எமது வீரப் போரின் கரங்களாகிய மக்கள் தாம் எதிர்பார்த்தது பொய்த்து விடக்கூடாது என்ற நினைப்புடன் எமக்காய் தியாகத் தீயில் உயிரிழந்த எம் புதல்வர்களின் கனவுகள் சமாதான சதி வலையில் சிக்கிச் சாவதை இன்னும் அனுமதிப்பதா? என்று குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

எமது வீர வரலாறும் போர்க்கள வீச்சும், அகிலம் அறியும்.

அந்த அர்ப்பணிப்புக்கள் கற்பனைக் கதையல்ல, நாம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களின் உன்னதப் போரும் உலகம் வியக்கும் அரசியல் போக்கும் அறிந்த நாம் இனியும் பேரினவாதிகளுடன் பேரம் பேசுவதா?

போர் தவிர்த்து சமாதானம் பேசுவது வீண் என்று விளங்கவில்லையா?,

தமிழீழ தமிழர் நாம் விடுதலைப் புலிகள் என யார் அறிவார்.

தமிழ் மக்கள் அனைவரும் புலிகளே. தமிழீழ தமிழர்களின் உலகப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன், இன்று நாம் அவர் ஆணைக்காக காத்திருக்கும் நிலை. பொறுமைக்கும் எல்லையுண்டு. காத்திருக்கின்றோம் தலைவர் சொல்லை.

இனியும் நாம் சர்வதேசத்துக்கு மதிப்பளித்து நாம் உயர்வானவர்கள் என்பதை அவர்கள் எமது பிரச்சினையில் ஈடுபட்டு நீதியான தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவர்களின் மனிதாபிமான கடமை.

அதில் சர்வதேசம் தவறும் நிலையில் நாம் எதுவித அச்சமும் இன்றி எமது தலைவனின் பின்னால் அணி திரள்வோம்.

மக்கள் படையணி போரிடும் போதிலே எமது இருப்பையும் வாழ்வையும் எமது வாழ்வுக்கான மண்ணையும் காப்போம்.

இருப்பினும் இழப்போ, இறப்போ என்ன யோசிக்க இருக்கின்றது. ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுதான் இறுதி முடிவு. அதுதான் மக்கள் படையணி.

புலிப்படை மண் காக்கும், மானம் காக்கும், வாழ்வு அமைக்கும். தமிழீழம் காணும், தரணி எங்கும் போற்றும்!

சர்வதேசமே, சர்வதேச மக்களே, சிறிலங்கா அரசே! யுத்தமின்றி சாத்வீகமான முறையில் கௌரவமான தீர்வுக்கே இன்றுவரை இந்த நிமிடம் வரை காத்திருக்கிறோம்.

எமது உள்ளத் துடிப்பையும் உணர்வையும் புரிந்து கொண்டு எமக்குரிய தீர்வினை தரத் தவறினால் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தேசிய தலைவனின் வழியிலே வழிகாட்டலிலே எமது தீர்வினை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டோமென உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

மரபு வழித்தாயகம், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, எமது இறையாண்மைக்கான போராட்டம் என்பனவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது போராட்டத்தையும் அங்கீகரிக்குமாறு சமாதானத்தை விரும்புகின்ற அனைத்து சர்வதேசத்தையும், சர்வதேச நாடுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் பின்பும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தலைவன் கூறியது போல் தரப்பட்ட காலஅவகாம் முடிவடைகின்றது. எனவே விடுதலைப் போரை எங்கள் காவலன் சுட்டும் காலத்தில் நாமும் இணைந்து முன்னெடுக்க தயார். எங்களை வாழ விடுங்கள் இல்லையேல் எமது வழியில் விடுங்கள் என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------



முன்னதாக பொதுச்சுடரினை வீரவேங்கை சிவாஜினி, லெப்டினன்ட் தானந்தா ஆகியோரின் பெற்றோர்களான தியாகராஜபிள்ளை, அருளானந்தம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியினை வீரவேங்கை மேஜர் தமிழ்மாறன், துணைப்படை வீரர் குப்பியன் ஆகியோரின் தந்தையாரான சந்தகுட்டி அரசரெட்ணம் ஏற்றி வைத்தார்.

ஈகச்சுடரினை கரும்புலி மேஜர் ஜெயத்தின் தாயார் குணநாயகம் நாகேஸ்வரி ஏற்றி வைத்தார்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன், தளபதி மருதம், தலைமைச் செயலக பொறுப்பாளர் புதியவன், மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் காருண்யா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூதூர் கிழக்கு மற்றும் மூதூர் தெற்கு பிரதேசங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


மேலதிகப் படங்களைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்

நன்றி: சங்கதி, புதினம்

Labels: , , ,


Get your own calendar

Links