« Home | மாமனிதர் ஞானரதன் » | தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை. » | மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம் » | ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும். » | இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் » | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். » | தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர். » | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் » | வை.கோ.வின் உரை »

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

இடம்பெயர்ந்தோருக்கான மனிதாபிமான உதவிகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான மனிதாபிமான பணிக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கடந்த மார்கழி 2005 இன் முற்பகுதியில் வன்செயல்கள் அதிகரித்து காணப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள பெரும் பகுதியான மக்கள் அங்கு நடைபெறும் வன்செயல்களினால் தங்கள் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து வன்னிக்கு இடம்பெயர்நது வந்துள்ளனர்.

இத்தகைய வன்செயல்களை சிறிலங்கா இராணுவமும் அதன் கூட்டாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களுமே மேற்கொள்வதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் முறையிட்டுள்ளது. இடம்பெயரும் மக்கள் தங்களுக்கு வன்னிப் பெருநிலமே பாதுகாப்பு என நினைத்து தொடர்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். 3,325 குடும்பங்கள் (16.01.2006 வரை சுமார் 14,500 தனிநபர்களாக) தங்கள் நிரந்தர குடியிருப்புக்களை விட்டு, கையில் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தடை முகாம்களையும், நீரேரிகளையும் கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

பெருமளவில் இடம்பெயரும் மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகளிலிருந்தும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமும் அவசர நிதி உதவியை வேண்டி நிற்கின்றது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக புகலிடங்கள் அமைப்பதற்கும் உணவு, நீர், உணவல்லாத நிவாரணப் பொருட்கள், வைத்தியப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு நிதி உதவி இன்றியமையாத ஒரு அவசரத் தேவையாக இருக்கின்றது.

ஆழிப்பேரலைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு தற்போது நடைபெற்று வரும் இராணுவ அச்சுறுத்தல்களால் ஏற்பட்டுவருகின்ற இடம்பெயர்வுகளும், அதன் விளைவுகளால் துன்பப்படும் மக்களுக்கான நிவாரணப்பணிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பெரும் பொறுப்பாக உள்ளது.மக்களின் தேவைகளைப் பொறுத்த வரையில் இன்று வரைக்கும் கிடைக்கப்பெற்ற நிதி உதவியானது போதியளவு இல்லாது இருக்கின்றது.மக்களின் தேவைகளை நிறைவு செய்யமுடியாது உள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிவாரணப் பணிகளையும், ஏனைய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களையும் நேர்த்தியாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கு தேவையான பணியாளர்களையும், கட்டமைப்புக்களையும், துறைசார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் கொண்டுள்ளது.

ஆனால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதிப்பங்களிப்புதான் அவசரமாகத் தேவைப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச ரீதியிலான பங்காளி நிறுவனங்களும் அல்லலுறும் மக்களுக்கு மனிதாபிமான ரீதியாகத் தொடர்ந்தும் அதிகளவில் பல வழிகளிலும் குறிப்பாக நிதிப்பங்களிப்பு செய்து கைகொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இடம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் உள்ளுர் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு தாயகத்தில் தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அவல வாழ்வுகளை நன்கு எடுத்து விளக்கி அவர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றி இன்றைய அவசர தேவைகளை நிறைவேற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------
தகவல் மூலம்: புதினம்.

Labels: , ,