« Home | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் » | திருமாவளவனின் உரை » | ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள் » | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: » | மறுபக்கம். » | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! » | மாமனிதர் ஞானரதன் » | தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை. » | மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம் »

தாக்குதலில் 2 புலிகள் கொலை.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஆயுதக்குழுவொன்று நடத்திய தாக்குதலில் இரு புலிவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
04.03.2006 சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு வவுணதீவிலுள்ள புலிகளின் முன்னணிக் காவலரன் மீது ஆயுதக்குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் இரு போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதுவொரு யுத்தநிறுத்த மீறற் சம்பவமென்று கூறிய விடுதலைப்புலிகள் தங்கள் காட்டமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கை வருமாறு:

2006.03.04 ஆம் நாளன்று அன்று அதிகாலை 12.30 மணியளவில் 300 மீற்றர் தூரத்திலுள்ள வவுணதீவு சிறிலங்கா சோதனைச் சாவடியில் இருந்தும் அதை அண்மித்திருக்கும் சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்தும் அவர்களுடன் இணைந்து வந்த ஆயுததாரிகளும் எமது வவுணதீவுக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் காவலரண் முன்னரணைத் தாக்கியுள்ளனர். இதில் தவலோகன் எனும் போராளியும் மற்றொரு போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.எதிர்த் தாக்குதலை எமது போராளிகள் மேற்கொண்ட போது இத் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து வந்த ஆயுததாரிகளும் வவுணதீவிலுள்ள தங்களது முகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர்.

சற்று நேரத்தின் பின் அவர்களது முகாமில் இருந்து அம்புலன்ஸ் வாகனமும், இன்னும் ஒரு சில வாகனங்களும் மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேச விரோத ஆயுத தாரிகளும் திட்டமிட்டு இத் தாக்குதல்களில் ஈடுபட்டபின் அவர்களின் முகாமில் இருந்து தப்பிச் செல்வதற்காகவும் காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காகவும் அம்பியுலன்ஸ் மற்றும் அவர்களது வாகனங்களைப் பாவிப்பதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்துகின்றோம்.

பெப்ரவரி 22, 23ஆம் நாட்களில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தி பூரணமாகக் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் சமாதானத்தை விரும்பாத சிறிலங்கா அரசின் பேரினவாதிகளும் சிறிலங்கா இராணுவம், படைப் புலனாய்வுத்துறையினரும் அவருடன் இயங்கிக் கொண்டிருக்கும் தேச விரோத ஆயுததாரிகளாகிய துணை இராணுவக் குழுக்களும் இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் எமது தாயகத்தில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து சிதறடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையே இம்மிலேச்சத்தனமான தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது.

இத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் இது ஒரு முற்றுமுழுதான யுத்த நிறுத்த மீறலாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
*************************
சில தினங்களின் முன் புலிகள் மீது தாக்குதல் நடத்தவெனத் தயார்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட இளைஞரொருவர் புலிகளிடம் வெடிபொரட்களுடன் சரணடைந்ததும் பல உண்மைகளை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
************************
நன்றி: புதினம்.

Labels: ,