« Home | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் » | திருமாவளவனின் உரை » | ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள் » | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: »

பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம்.

மறுபக்கம்
கோகர்ணன்.



திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அரசாங்கம் பல முனைகளிலிருந்தும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியதையொட்டி பி.பி.சி. வானொலியின் ஆங்கிலச் செய்தி அறிக்கை ஒன்றைக் கேட்டேன். அதற்கெல்லாம் முன்னோடியான நிகழ்வு விடுதலைப் புலிகள் தம்பலகமத்தில் நடத்திய கண்ணி வெடித் தாக்குதல் என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்டபோது, க்ளாஸ்கோ பல்கலைக்கழக ஊடகத்துறைக் குழுவினர் 2004 இல் வெளியிட்ட ஒரு நூலின் நினைவு வந்தது. நூலின் தலைப்பு இஸ்ரேலிலிருந்து கெட்ட செய்தி (பாட் நியூஸ் ஃப்றொம் இஸ்ரேல்) அந்நூலில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை தொடர்பான தகவல்கள் எவ்வாறு பிரித்தானிய ஊடகங்களால் மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்று விரிவாக ஆராயப்பட்டிருந்தது. பொதுப்பட, இஸ்ரேலியப் படைகள் எந்த அட்டூழியத்தைச் செய்தாலும் அதற்கு முன்னோடியாகப் பலஸ்தீன தீவிரவாதக் குழுவொன்று நடத்திய தாக்குதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். பலஸ்தீனப் பேராளிகளுக்கு சினமூட்டுகிற காரியங்கள் அன்றாடம் இஸ்ரேலில் நடைபெறுகின்றன. சட்டவிரோதமான குடியேற்றங்கள் படையினரின் துணையுடன் நடைபெறுகின்றன. பலஸ்தீன மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர். அவர்கள் அன்றாடம் முகங்கொடுக்கின்ற அவமதிப்புகளும் துன்புறுத்தல்களும் பற்றியே பேசப்படுவதில்லை. ஈசாப் கதையில் வருகிற ஓநாய் ஆட்டுக்குட்டி மீது குற்றஞ் சுமத்துகிற மாதிரி, இஸ்ரேலால் எதையுஞ் செய்ய முடியும்; எதையுஞ் செய்ய முடியும். இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இரண்டு நாடுகள் மட்டும் எப்போதும் எதிர்த்து வாக்களிக்கும். ஒன்று இஸ்ரேல், மற்றது அமெரிக்கா. அமெரிக்காவிடம் வீற்றோ அதிகாரம் உண்டு. ஐ.நா. சபையால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.
அதேவேளை, இஸ்ரேலின் நடத்தை பற்றியோ பலஸ்தீன மக்களின் நியாயங்கள் பற்றியோ பிரித்தானிய ஊடகங்கள் செய்தியை வெளியிடுகிற விதம் இரண்டு தரப்பினரிடையிலான மோதல் என்ற விதமாகவோ அல்லது போனால் பயங்கரவாதிகட்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையிலான போராட்டம் என்ற விதமாகவோ தான் அமைகிறது. மோதல்களின் பின்னால் உள்ள நியாய, அநியாயங்கள் சொல்லப்படுவதில்லை. நூற்றுக் கணக்கானோர் வாழுங் குடியிருப்புக்களையும் பல உயிர்களையும் பலிகொள்ளும் இஸ்ரேலிய இராணுவமும் ஒரு சிறிய தாக்குதலை நடத்திய ஒரு போராளிக்குழுவும் ஏற்படுத்திய அழிவுகள் அவற்றின் அளவின் அடிப்படையில் அல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு சம்பவம் என்றவாறு ஒப்பிடப்படுகின்றன. இது தற்செயலானதல்ல. திட்டமிட்ட முறையிலேயே நடக்கிறது என்பதை அந்த நூல் தெளிவுபடுத்தியிருந்தது. நம்மிற் பலர் நம்புவது போலன்றி பி.பி.சி. நடுநிலையானதல்ல. தமிழோசையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாப விதமாகச் செய்திகள் வருவதால் பி.பி.சி. பற்றிய சாதகமான படிமம் ஒன்று தமிழரிடையே உருவாகிறது. அதே தமிழோசை மூலம் குறிப்பிட்ட சில நாடுகட்கெதிரான விஷமத்தனமான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பி.பி.சி.யின் கபடத்தைத் தோலுரித்துக் காட்டுவதானால் ஆங்கிலத்திற் கூறப்படுகிறவை பற்றித் தமிழிற் கேள்வி எழுப்ப வேண்டும். பி.பி.சி. தனது நடுநிலை வேடத்தைக் கவனமாகப் பேணும் விதமாக தமிழோசையில் இங்கிருந்தும் தமிழகத்திலிருந்தும் பலரைத் தொலைபேசி மூலம் செவ்வி காணுகிறது. யாராவது இதுவரை பி.பி.சி.யின் யோக்கியம் பற்றிப் பேசியுள்ளார்களா? பி.பி.சி.யில் தங்களது குரலைக் கேட்பதே பெரும் பாக்கியம் என்று நினைக்கிறோமானால், பி.பி.சி.யை விமர்சிப்பது தெய்வ நிந்தனை மாதிரி ஆகி விடாதா?

இன்று வரை, தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்க்கப்படும் அளவுக்குத் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியற் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களிடையிலும் புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்ற விதமாகவே விவாதங்கள் முன்னெடுக்கப்படுகிறதை நாம் கவனிக்கலாம். புலம் பெயர்ந்த தமிழரிடையே இப்போக்கு மிக அதிகம். அதைவிட, நிபுணர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளுகிற சிலர் பி.பி.சி.யைவிடப் பயங்கரமான நடுநிலை நாடகம் ஆடுகிறார்கள். திருகோணமலைச் சந்தையில் வெடித்த குண்டு விடுதலைப் புலிகள் வைத்தது என்று அருகிலிருந்து பார்த்தவர் போல எழுதியிருந்தார். இந்த மாதிரியான நிபுணர்கள் எல்லாரும் எங்கேயிருந்து தகவல்களைப் பெறுகிறார்கள் என்று ஊகிப்பது கடினமல்ல. எனினும் ,இது தான் இன்றைய பத்திரிகைத் தொழிலாகியுள்ளது. இதன் விளைவாக மக்கள் உண்மைகளை அறியும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இன்று தென்னிலங்கையில் உள்ளவர்கட்கு வடக்கு - கிழக்கில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? தெற்கிலுள்ள தமிழ் மக்களிற் பலருமே அறியமாட்டார்கள். தொலைக்காட்சியும் அவசரச் செய்திகளை வழங்கும் வானொலியும் அருகி வரும் வாசிப்புப் பழக்கமும் தமிழ் மக்களின் சாபக்கேடாகியுள்ளன. உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய அக்கறையில்லாதவர்கள் ஊடகத்துறையின் உச்ச நிலையில் உள்ளனர். பிரதான சிங்களச் செய்திப் பத்திரிகைகள் இன்று முழுமையாகப் பேரினவாதச் சிந்தனைக்குச் சேவகம் செய்கின்றன. அவர்கள் மக்களிடம் எப்படி உண்மைகளைக் கூற இயலும்? உண்மையை அறிய அக்கறையில்லாதவர்கள் தாம் விரும்பினாலும் மக்களிடம் உண்மையைச் சொல்ல இயலாது. அந்தளவுக்கு வரலாறுபற்றிய புனைவுகளும் குறுகிய மனப்பான்மையும் நமது ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதலில் நாங்கள் நம்ப விரும்புகிற பொய்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இந்தியாவைப் பற்றிய கனவுகளில் வாழுகிறவர்கள் இருக்கிறார்கள். மன்மோகன் சிங் ராஜபக்‌ஷவுக்கு எச்சரிக்கை விடுத்ததாலேயே திருகோணமலையில் வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றும் இந்தியாவை மீறி இலங்கையில் யாரும் எதுவும் செய்ய இயலாது என்றும் இந்தியாவைப் பகைக்காமல் தமிழ் மக்கள் விடுதலையை வெல்ல வேண்டும் என்றும் பலவாறான கதைகளைக் கடந்த சில வாரங்களில் வாசித்திருக்கிறேன். சிங்கள மக்களுக்கு இந்தியாவைப் பற்றி வித்தியாசமான ஒரு படிமம் காட்டப்படுகிறது. சம்பூரில் குண்டு மாரி பெய்த போது இந்தியாவுடனான தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தனவா என்று நமது நிபுணர்கள் விரைவில் தெரியத் தருவார்கள் என நினைக்கிறேன்.

அமெரிக்கா பற்றியும் நோர்வே பற்றியும் நம்மிடையே கனவுகள் உள்ளன. இதிற் பரிதாபத்திற்குரியது ஏதென்றால் உலக வல்லரசுகளின் மேலாதிக்க பகடை ஆட்டத்தில் நம்மை வலிந்து ஈடுபடுத்துமாறு நாம் தூண்டப்படுகிறோம் என்பது தான். தமிழ் மக்களின் விடுதலை இந்தியாவையோ அமெரிக்காவையோ மகிழ்விப்பதால் கிட்டுவது அல்ல. நோர்வேயின் சமாதானப் பணி அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களினின்றும் சுயாதீனமானதுமல்ல. விடுதலைப் புலிகளை ஒரேயடியாகக் கை கழுவுவதைத் தவிர்க்கவே நோர்வே பயன்படுகிறது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவானது ராஜதந்திர நாடகம் ஆடுகிற அளவுக்குப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவோ உண்மைகளை அறிந்து எல்லோருக்கும் அறியத் தரவோ அக்கறைப் படுகிறது என நான் நம்பவில்லை.

நமது அரசியல் ஆய்வாளர்கள் சர்வதேசக் காய் நகர்த்தல்கள் பற்றிக் கவலைப்படுவதிலும் எந்த ஏகாதிபத்தியப் பூனைக்கு எந்த எலியைப் பிடித்து மணிகட்டுவிப்பது என்பதிலும் செலவழிக்கிற நேரத்திற் சிறு பகுதியைச் சர்வதேச ஊடகங்களின் அரசியல் பற்றித் தெளிவுபடுத்தப் பயன்படுத்தினால் நல்லது.

நாம் யாரையும் வலிந்து பகைக்க வேண்டியதில்லை. நண்பர்களல்லாதவர்களை எல்லாம் எதிரிகளாகக் கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் நம்முடைய கனவுகளையும் புனைவுகளையும் நாமே நம்பி ஏமாறும் அவலம் நமக்கு வேண்டாம். இந்த நாடு அந்நிய ஆதிக்கச் சக்திகளால் தூண்டப்படும் அபாயம் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோமா? பேரினவாத மேல்கொத்மலைத் திட்டத்தின் மூலம் ஜப்பான் தனது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கிறது. இந்தியா இலங்கையைச் சுற்றி வளைக்கும் தேவைக்காக சேது சமுத்திரத்தில் கால்வாய் வெட்டுகிறது. திருகோணமலை மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கித் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த இந்தியாவும் இன்னொரு புறம் அமெரிக்காவும் சூழ்ச்சிகளில் இறங்குகின்றன.

உலக நாடுகளின் அதாவது பெரிய வல்லரசுகளின், அனுதாபம் என்பது அவர்களது இலாப, நட்டக் கணக்குகளை வைத்தே வெளிப்படுத்தப்படுகிறது. அந்த அனுதாபத்தை வெல்லுகிற நோக்கத்தைத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முதன்மைப்படுத்துமானால் அப்போராட்டம் இன்னொரு அடிமைத் தனத்துக்கான போராட்டமாகவே முடியும்.

நேபாளத்தின் அரச வன்முறையைக் கண்டித்துக் கொண்டே அதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வந்த அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் நாம் எதை எதிர்பார்க்க இயலும்? சரத் பொன்சேகா கொலை முயற்சியைக் கண்டித்த ஆட்சியாளர்களும் ஐ.நா. பொதுச் செயலாளரும் அப்பாவி மக்கள் மீது குண்டெறிந்ததை ஏன் கண்டிக்கவில்லை? அவர்கள் அரசாங்கத்தைக் கொஞ்சங் கடிந்து கொண்டதாகத் தமிழ் மக்களும் மெச்சியதாகச் சிங்கள மக்களும் நம்புமாறு தூண்டப்படுகின்றனர். இது தான் நமது ஊடகங்களின் பரிதாபமான நிலை. இது தொடருமானால் அமைதியைக் குலைக்க அரசியல் வாதிகளோ அந்நிய விஷமக்காரர்களோ தேவையில்லை.

உலக அரசாங்கங்களையும் வல்லரசுகளையும் வைத்துக் கணித்தால், எந்த விடுதலைப் போராட்டமும் இன்று மிகவும் தனிமைப்பட்டே உள்ளது. விடுதலைக்காகப் போராடும் மக்களையும் விடுதலை இயக்கங்களையும் கொண்டு கணித்தால், நமக்கு உலகெங்கும் நண்பர்கள் உள்ளனர். அந்த உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமே ஒரு விடுதலை இயக்கம் ஒரு முழுமையான விடுதலை இயக்கமாக முகிழ்க்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் போன்ற பல நட்புச் சக்திகள் இருந்தன. இன்றும் இந்தியாவின் தமிழரல்லாத மாக்ஸிய, லெனினிய வாதிகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பிலிப்பினிய கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கிறார்கள். இது தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள உகந்த தளம். இவை தான் நாம் உதறித் தள்ளக் கூடாத உறவுகள்.

***********************

நன்றி: தினக்குரல்.

Labels:

இங்கு தமிழ்நாட்டில் ஊடகங்கள் என்றால் தொலைகாட்சிகளும் பத்திரிகைகளும் தான்.தொலைகாட்சிகளில் முதன்மையான SUN TV யிலோ அவர்கள் புராணம் பாடவே நேரம் சரியாக இருக்கின்றது. ஏதோ வேற்றுகிரக செய்திகள் போலத்தான் இலங்கை செய்திகள் வாசிக்கப்படுகின்றன.ஆங்கில பத்திரிகை THE HINDU வின் N.Ram சந்திரிகாவின் நண்பர். தமிழ் பத்திரிகைகளில் முதலிடம் பிடிப்பது நடிகர், நடிகைகளின் பேட்டியும் கள்ளக்காதல் விவகாரங்களும் தான். சுயத்தை மறந்து சுகமாய் இருக்கிறான் தமிழ்நாட்டு தமிழன்.

வன்னியன்,வணக்கம்!


பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களின் கருத்துக்களின் நியாயத்தன்மைகள் ஏற்க்கக்கூடியதெப்போது சாத்தியமென்றால், தமிழர் தரப்பில் புலிகள் தம்மைச் சுய விமர்சனத்துக்குட்படுத்தித் தமது இருப்புக்கான போராட்டச் செல்நெறியைத் தமிழர்களின் இருப்புக்கானதாகவும்,தமிழ் மக்களின் பன்முகத் தன்மையிலான வெளிப்பாடுகளை அங்கீகரித்து,அதையே சிங்கள இனவாதச் சியோனிசத்துக்கெதிரானதாக வளர்த்தெடுக்கும்போதுதாம் சிவசேகரத்தின் கருத்துக்கு வலிமை கூடும்!எமது தரப்பை நாம் விமர்சித்து,அந்த அமைப்பை மக்கள் போராட்டக்குழுவாக மாற்றி,உழைப்பவர்களின் நலனை மையப்படுத்திய-தேசியத் தன்மைகளைக் காப்பதற்கான வழிமுறைகளில் ஏகாதிபத்தியங்களைத் "தமது சொந்த மக்களின் பலத்தோடு" எதிர்கொள்ளும் திரணி பெறும்வரை தமிழர்களுக்கான நியாயம் வெகுதூரத்தில் நிற்கிறது.


தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.உலகத்தின் செயற்பாடுகள்-இவர்களைச் சார்ந்திருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்புகள் இன்று நேற்றைய கதைகளில்லை.இதைப் பேராசிரியர் ஏதோ பெருங் கண்டுபிப்புப்போன்று எழுதுகிறார்.


பி.பி.சியை யாரு நம்புகிறார்கள்?


மண்டையில் ஏதோவொன்றைக் காவுபவர்கள்தாம் அதையுங் காரணமாக எடுத்துக் கொள்வார்கள்.


இன்றைய நமது போராட்ட-சமாதானச் செல் நெறியாவும் பிழையானது.நாம் பல் முறையிதைச் சுட்டிக்காட்டிப் புலிகள் என்ன செய்தாகவேண்டுமென்று எழுதியுள்ளோம்.இங்ஙனம் செய்யும்போது முழுமொத்தத் தமிழ் மக்களின் பங்களிப்போடு நாம் நமது இலக்கையடைய முடியும்.அத்தகையவொரு நிலை வருவதற்குப் புலிகளின் பாரிய தவறான"மக்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாமை"முதன்மை பெறுகிறது.மக்களை நம்பாத எந்தப் போராட்டமும் இறுதி இலக்கை அடையமுடியாது.


புலிகள் மீளவும் தனிநபர்களை வழிபடாது, மக்களை நம்பி,அவர்களே வரலாற்றைப்படைப்பதென்ற உண்மையை உணர்ந்து தமது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தை வற்புறுத்திக்கொண்டு, பல்முனைச் சுய விமர்சனத்தோடு ஜனநாயகத்தை மக்களிடம் உட்புகுத்தி அவர்களைப் போராட்டச் சக்தியாக்காதவரைத் தமிழர்களுக்கு விமோசனமில்லை.


எமது போராட்டமானது முழுமொத்தச் சிங்களவர்களுக்கும் எதிரானதில்லையென்பதைப் பகிரங்கமாகத் தென் இலங்கை முற்போக்கு சக்திகளோடிணைந்து பரப்புரை செய்தபடி, அந்த மக்களையும்-அவர்தம் அச்சத்தையுங் களையுங்கால் நாம் நமது இலக்கைப் பெறவதில் எந்த வெளி நாடுகளாலும் தடுத்திட முடியாது.இதைப் புலிகள் மறுத்துத் தமது வர்க்க நலனுக்கான ஊசலாட்டத்தில் போராடினால், தமிழர்களின் நியாயம் அடிபட்டுப் போவதை எந்தப் பேராசிரியரும் தடுத்திட முடியாது.


அவ்வளவுதாம்,வன்னியன்!


காலத்தை அறி,
நேரத்தை மதிப்பீடு செய்,
எமது வலிமையைப்,பலவீனத்தை மதிப்பிடு,
மக்களைச் சுயத்தோடு ஏற்றுக் கொள்,
அவர்தம் வாழ்வைப் பெறுமானமாக்கு,
மக்கள்தம் உயிருக்கு முதன்மை அளி,நீ எதிரியைப் பல மடங்கு புரிவாய்.


மக்கள் மன்றங்களை நிறுவு,
அதையே போர்ப் பாசறையாக்கிடுவார் மக்கள்,எதிரிகள் யார்- நண்பர்கள்கள் யார் என்பதை மக்கள்தாம் தீர்மனிப்பதே தவிர ஒரு குழுவல்ல.அந்த மக்கள் மன்றங்களில் அவர்களே பலதைச் சாதிப்பதற்கான வாய்ப்புகளை போராட்டத் தலைமை செய்தாகவேண்டும்.மக்களைக் கண்டு அஞ்சும் அல்லது நம்பாத போக்குகள் குறிப்பிட்ட அமைப்பை பாசிசத் தன்மைக்குள் வீழ்த்தும்.


புதிய ஜனநாயகத்துக்கான போரே தேசிய இனச் சிக்கல்களைக் குறைந்த பட்சமாவது வெற்றியடையத் தக்க வழிகளில் தீர்க்க முனைகிறது.

This comment has been removed by a blog administrator.

ஊடகங்களின் திரிபுகளையும்,நடக்கும் உண்மைகளையும் மக்கள் புரிந்து உண்ருமாறு ந்ம்மால் முடிந்த அள்வு
உழைப்போம்.

அன்புடன்
துபாய் ராஜா.

ஊடகங்களின் திரிபுகளையும்,நடக்கும் உண்மைகளையும் மக்கள் புரிந்து உண்ருமாறு ந்ம்மால் முடிந்த அள்வு
உழைப்போம்.

அன்புடன்
துபாய் ராஜா.

Anonymous said...
சிறி றங்கன்
தனது வழமையான புலம்பலத்தை தொடருகின்றார். புலிகளுக்கு எதிராகக் கதைத்தால் தான் ஜனநாயகம், சமத்துவம் என்ற மாதிரியான அடிமுட்டத்தனமாக விவாதிகளில் சிறி றங்கனும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே!

இது வரை காலமும் தங்களின் வரட்டுக் கொள்கைகளில் சுயவிமர்சனத்தைச் செய்யத் தெரியாத இவர் புலிகள் சுயவிமர்சனம் செய்யச் சொல்லிப் புலம்புவது கேலிக்குரியது. இது வரை காலமும் சிங்கள இராணுவத்தின் கொலைகளுக்கு வாய் திறக்காத இவர்கள், அதைப் புூசி மெழுகும் துரோகத் தனத்தை செய்து கொண்டு மற்றவர்களுக்கு புத்தி மதி சொல்கின்றார்கள்.

வன்னியனால் திருத்தப்பட்டது.

எழுதிக்கொள்வது: vimala

Rajeevuku vaicha maathiti eni sejjamal satithan.athavathu, antha uthari thalla koodatha uravukaluku kundu vaikamal etunthal sati.

12.2 15.5.2006

வன்னியன்,
நான் எழுதும் இப் பின்னூட்டம் தங்கள் பதிவு பற்றியதல்ல. அதற்காக மன்னிக்கவும். நண்பர் சிறிரங்கன் அவர்களுக்கு பதில் அளிப்பதற்கு உங்கள் தளத்தை பாவிப்பதற்கு மன்னிக்கவும். தயவு செய்து இப் பதிவை அனுமதிக்க முடியுமாயின் , அனுமதிக்கவும். நன்றிகள்.

நண்பர் சிறிரங்கன் அவர்களுக்கு,

//அந்த அமைப்பை மக்கள் போராட்டக்குழுவாக மாற்றி,உழைப்பவர்களின் நலனை மையப்படுத்திய-தேசியத் தன்மைகளைக் காப்பதற்கான வழிமுறைகளில் ஏகாதிபத்தியங்களைத் "தமது சொந்த மக்களின் பலத்தோடு" எதிர்கொள்ளும் திரணி பெறும்வரை தமிழர்களுக்கான நியாயம் வெகுதூரத்தில் நிற்கிறது.//

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் மக்கள் அமைப்பாகத் தான் வளர்ச்சி பெற்று நிற்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் இந்த உண்மையை உலகுக்கு தமது வாக்குகள் மூலம் இடித்துரைத்திருக்கிறார்கள். தமிழீழத்திலும் , உலகின் பல நகரங்களிலும் நடந்தேறிய பொங்கு தமிழ் நிகழ்வுகளும் இதற்கு ஓர் எடுத்துக் காட்டு. அய்யா சிறிரங்கன், நானும் ஓர் தமிழ் பொதுமகன் தான், நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல. ஆனால் புலிகளை ஆதரிப்பவன். ஆக, என் போன்ற சாதாரண மக்கள் உங்கள் கண்களுக்கு மக்களாகப் படவில்லை. நாங்கள் எல்லாரும் புலிகளாகத் தான் உங்கள் கண்களுக்கு படுகிறது. யாராவது புலிகளைக் குற்றம் கூறி, சிங்கள பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினால் அவர்கள் தான் தமிழ்மக்கள் என்கிறீர்கள். என்ன விந்தை அய்யா?

//தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.//

அய்யா சிறிரங்கன், படிக்கத் தெரிந்தால், வியற்னாம் போராட்ட அமைப்பான Viet Cong னதும், சீனப்
புரட்சி வரலாற்றையும் புரட்டிப் பாரும் அவர்கள் எப்படி தமது போராட்டத்தை வென்றார்கள் என்று. சிறிரங்கன் வழமையாக உமது பின்னூட்டங்களிற்கு நான் பதிலளிப்பதில்லை. காராணம்,புலிகள் எதிர்ப்பு எனும் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு, அறிவுபூர்வமான கருத்துக்கள் எதையும் நீர் முன்வைப்பதில்லை. புலிகளை விமர்சிப்பதில் தவறில்லை. கட்டாயம் புலிகள் அமைப்பு விமர்சிக்கப்பட வேண்டியது , ஏனெனில் புலிகள் அமைப்பு மக்கள் அமைப்பு. புலிகள் அமைப்பு தனிப்பட்ட பிரபாகரனின் அமைப்பல்ல. ஈழத்தமிழர்கள் கண்ணீர் விட்டு வளர்த்த அமைப்பு. ஈழத் தமிழர்களின் அமைப்பு. ஆக, விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும், யதார்த்தமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். இன்னுமொரு விடயத்தை நீர் புரிந்து கொள்ள வேண்டும், மேற்குலக நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள பல ஈழத் தமிழ் இளைஞர்கள் , அந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்று அத் துறைகளில் வேலை பார்க்கிறார்கள். ஆக, அவர்கள் தங்களின் பகுத்தறியும் அறிவை (Analytical Skills)நன்றாக வளர்த்துள்ளார்கள். ஆகவே, உம்மைப் போல அவர்கள் எல்லோரும் வடிகட்டின முட்டாள்களாக, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத பையித்தியங்களாக இருப்பார்கள் என நீர் நினைத்தால் அது உமது அறிவீனம். பிறப்பால் ஒருவரும் அறிவாளியாகப் பிறப்பதில்லை. எனவே நீரும் முடிந்தால்,புலி எதிர்ப்பு எனும் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளி வந்து சாதாரண ஈழத் தமிழனாக இருந்து நிலைமைகளை ஆராய்ந்து பாரும் அல்லது அப்படிச் சிந்திக்கக் கூடிய ஆற்றலை வளர்க்கப் பாரும். நன்றிகள்.

அண்ணாத்த.

தொடர்ந்து புலிகளுக்கு வெளிநாடுகள் கோடாலி போட்டுக்கொண்டே வருகுது அப்போ எங்கேயோ பிரச்சனைக்குரிய தவறு இருக்கு என்பதை
மறுப்பதற்குகில்லை. நீங்கள் சொல்வது மாதிரி வெளிநாடுகள எல்லாம்
ஓடுஒடிவந்து எங்கட பிரச்சனையை தீர்த்துவைக்கவேணும் என்று எதிர்பார்ப்பது. எங்கட கையை உயர்த்திக் கொண்டு சரணடைகிறோம் என்று. வல்லரசுகளிடம் மாண்டிடுவதற்கு சமமாகிவிடுவதற்கு வழி வகுக்கிறது..!
நடக்கின்ற சம்பவங்களை உடனடியாக அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது நகைப்புக்குகிடமானது...
ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே நடந்து முடிந்வுடனோ (எமக்கு தெரிவதற்கு முன்பாக) அவர்களுக்கு தெரிந்து விடுகிறது...
புலிகளை ஆதரிப்பதால் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பதும் புலிகளை எதிர்ப்பதால் பிரச்சனை தீர்ந்து விடும்
நினைப்பதும் ஒரு கேலிக்குரியதே........!

ஆயுதம் வைத்திருபவர்களுடன் மக்கள் பின்னால் நிற்கிறார்கள் அல்லது
மக்கள் வேறு ஆயுதப்போராலிகள் வேறுல்ல என்று வாதிடுவது.
இருபதாம் நு+ற்றாண்டுகளுக்கு பொருந்திப் போகக்கூடும்
இன்று மக்கள் வாழ்வதற்காக இறந்து கொண்டுருக்கிறார்கள்...!

அப்ப என்னதான் சொல்ல வாறிங்க? பிரச்சனைகளின் மூலங்களைத் தேடுவோம்....!

இப்படிக்கு

தேடவந்தான்
...........................

அய்யா சிறிரங்கன், படிக்கத் தெரிந்தால், வியற்னாம் போராட்ட அமைப்பான Viet Cong னதும், சீனப்
புரட்சி வரலாற்றையும் புரட்டிப் பாரும் அவர்கள் எப்படி தமது போராட்டத்தை வென்றார்கள் என்று. சிறிரங்கன் வழமையாக உமது பின்னூட்டங்களிற்கு நான் பதிலளிப்பதில்லை. காராணம்,புலிகள் எதிர்ப்பு எனும் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு, அறிவுபூர்வமான கருத்துக்கள் எதையும் நீர் முன்வைப்பதில்லை.


வெற்றி,உங்கள் நிலைமை புரிகிறது!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம்-ஒரு கோப்பையல்ல!

வியாட்நாமோ? அது எங்க இருக்கிறது??

தெரியாது!

படிக்கவுந் தெரியாது,வேற்று மொழி அறிவில்லை எனக்கு.

அட நீங்க சொன்னாற்பின்தாம் தெரிகிறது நம்ம இளைஞர்கள் பல்கலைக்கழகங்களில் வேறு படிப்பதென்று.

அடுத்து வெற்றி நீங்கள் திருக்குறளைக்(//"எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" //எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு குறைந்த மக்கள் , இவர்களின் மாயைக் கருத்துக்களின் மெய்ப்பொருளை அறியாமல் நம்பி குழப்பமடைந்து விடுவதும் உண்டு. இக் கும்பலுக்கு உண்மையில் எம் மக்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், இக்கருத்துக்களை புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லி ஏன் தலைமையுடன் விவாதிக்கக் கூடாது? நேரடியாக விவாதிக்க முடியாவிட்டால் இக் கருத்துக்களை தலைமைப் பீடத்திற்கு கடித மூலமாகவே அனுப்பி விளக்கம் கேட்கலாமே//)கற்றமாதிரித்தாமோ வியாட்நாம் வரலாறும் கற்றுள்ளீர்கள்?

ஏதோ கேட்டுப் பார்த்தாவது தெரியிற ஆசைதாம்.

ஏன்பாருங்கோ ?கட்டடம் கட்டுறத்துக்கு அத்திவாரம் பலமாக இருக்கவேணுமெண்டு நம்ம "பெரிசுகள்"அடிக்கடி சொல்வார்கள்.உங்கட திருக்குறள்பற்றிய படிப்பில் இது சரியான-படு வெளிச்சம் பாருங்கள்.

...ம்..."கான மயிலாடக் கண்டு வந்த வான்..."ஞாபகம் வருகிறதா?ஞாபகம் வருகிறதா? வெற்றி ஞாபகம் வருகிறா?

போங்க வெற்றி அசத்துறீங்கள்!

Post a Comment

Get your own calendar

Links