« Home | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. »

பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர் படையணி மரபுப்படையணியாக வளர்ந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதியான லெப். சீலனின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1978ல் சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜேர்.ஆர்.ஜயவர்த்தனா பதவியேற்றபோது அதற்கு மதிப்பளிக்க திருகோணமலை இந்துக் கல்லூரியில் சிறிலங்கா தேசியக் கொடியேற்றியபோது அதனுள் பொஸ்பரஸை வைத்து அதனை எரியச் செய்தவர் உயர்தர மணவரான சார்ள்ஸ் அன்ரனி.



அந்தச் சம்பவத்துடன் தலைமறைவாகி தாயக விடுதலைப் போராட்டத்துக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்ட சார்ள்ஸ் அன்ரனிஇ பின்னர் சீலன் ஆனார்.

சிறந்த ஒரு இராணுவத்தாக்குதல் வீரரான சீலன்இ சிறிலங்கா இராணுவம் மீதான முதல் தாக்குதல் யாழ். நகர மையத்தில் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றியவர்.
சிறிலங்கா கடற்படை மீதான முதல் தாக்குதலை பொன்னாலையில் நடத்தியது.
சாவகச்சேரி சிறிலங்கா காவல் நிலையம் மீதான தாக்குதலை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியது.
கந்தர்மடம் வாக்குச்சாவடி மீதான தாக்குதல் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வரலாறின் முதல் முக்கிய தாக்குதல்களை நடத்தப்பட்டவை லெப். சீலன் தலைமையிலாகும்.


விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித்தளபதியாக விளங்கியவர் லெப். சீலன்.
தாயக விடுதலைப் போராட்டத்தை வீரியமாக்குவதற்கான பணிகளில் தென்மராட்சியில் மீசாலை அல்லாரையில் முகாமில் தயாராகிக் கொண்டிருந்தபோது- அந்த முகாம் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பில் சிறிலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகின்றது.

அந்த சுற்றிவளைப்புத் தாக்குதலில் எதிரியுடன் சீலனும் போராளிகளும் சமராடினர். அதில் சீலனும் ஆனந்த் என்ற போராளியும் விழுப்புண் அடைகின்றனர். அதில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதத்தை காக்கவென சக போராளி ஒருவனுக்கு கட்டளையிட்டு அவரைக் கொண்டு சுடுவித்து லெப்டினன்ட் சீலன் வீரகாவியமானார்.
அவர் வழியில் வீரவேங்கை ஆனந்த்தும் வீரச்சாவைத் தழுவினார்.

அன்று ஒரு துப்பாக்கியைக் காக்க இப்படியான தியாகத்தை புரிந்த மாவீரன் லெப். சீலனின் பெயரில் தமிழரின் முதல் மரபுப் படையணியாக சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்குகின்றது.

Labels: , ,