« Home | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். »

தர்முசிவராம் (பிரமிள்) பற்றி

-காசிநாதர் சிவபாலன்-

அண்மைக் காலங்களில் `ஆனந்த விகடன்', `குமுதம்', `குங்குமம்' பத்திரிகைகளைக் காண்பதுமில்லை, காண நாட்டமுமில்லை. அகஸ்மாத்தாக சமீபத்தில் ஒரு `விகடனை' காணக் கிடைத்தது. அதில் `கிரியா' என்.ராமகிருஷ்ணன் கதைபோல் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்,. `கதாவிலாசம்' என்று தலைப்புப் போல போட்டு கீழே `சூரியனுக்குக் கீழே....' என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்தார். ஒவ்வொரு வாரமும் தொடர்போல் எழுதி வருகிறார் போலத் தெரிகிறது.


72 ஏப்ரலில் நானும், தர்முசிவராமும் (பிரமிள்) இந்தியாவுக்குச் சென்றோம். எனக்கு இது இந்தியாவுக்கான முதல் பயணமாகவும், தர்முசிவராமுவுக்கான கடைசிப் பயணமாகவும் அமைந்தது. அவர் இறப்பதற்கு முதல் வருடம் சென்னையில் அவரைக் காணக் கிடைத்தது. தர்முவைப் பற்றியதும் தர்முவினுடைய புடைப்புகள் பலதையும் அச்சில் கொண்டு வந்த கால. சுப்பிரமணியமும் அவருடனிருந்தார். நம் நாட்டுக்கு அதுவும் முக்கியமாக அவரது ஊரான திருகோணமலைக்கு வரும்படி அழைத்தேன். அவரும் வருகிற வருடம் பார்க்கலாம் என்றார் - (ஒரு வருடத்தினுள் அவர் இங்கு வராமலே மறைந்து விட்டார்). இராமகிருஷ்ணன் தர்முவுடன் இலக்கியத் தொடர்பாளராகவும், தோழமைமிக்கவராகவும் இருந்தார். எனக்கு முதன் முதலில் `மாமல்லபுரத்தை'க் கொண்டு போய்க் காட்டிய கைங்கர்யமும் அவருடையதே.



இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் ஒரு ஜென் கதையைத்தொட்டு, ஊடே `தர்முசிவராமு' வைப் பற்றியும் மூன்று பக்கக் கட்டுரையினுள்ளேயே கட்டமும் போட்டு நிறையவே எழுதியிருந்தார். கட்டத்தினுள் இப்படி தர்மு பற்றி அவர் ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார்.

"மரபின் செறிவும், கவித்துவத்தின் உச்சமும் கொண்ட கவிஞராக நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர் பிரமிள். இவரது கதைகள் "லங்காபுரி ராஜா" என்னும் தொகுப்பாக வெளி வந்துள்ளன. இவர் எழுதிய ` ஆயி' என்ற குறுநாவல் முக்கியமானது."

சி.சு.செல்லப்பாவின் `எழுத்து' பத்திரிகையில் எழுதத் துவங்கியவர் பிரமிள், `தர்மு' அரூப் சிவராம் என்ற பெயரில் நிறைய எழுதியுள்ளார். `கண்ணாடியுள்ளிருந்து', `கைப்பிடியளவு கடல்', `மேல் நோக்கிய பயணம்' போன்றவை அவரது முக்கிய கவிதைத் தொகுதிகள், ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள் தமிழ் உரை நடை குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர். எதிர்பாராத உடல் நலக்குறைவு காரணமாக 1997 இல் (06.01.1997) மரணமடைந்த `பிரமிள்' இன்றும் நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஓர் உந்து சக்தியாகவே இருந்து வருகிறார்." என்று குறிப்பிட்டிருந்தார்.

"இயற்கையின் ஒரு துளிதான் மரம். அது திசையற்றது. "Sழந்தை'தான் என்று பிறரைச் சுட்டிக் காட்டுவது போன்ற

சமிக்ஞ்சை கொண்டது." என்று இயற்கையைப் பற்றி தனது கவித்துவமான அவதானிப்புகளை எழுத்தில் பதிவு செய்த மாபெரும் கவிஞரான `பிரமிள்' மிகக் குறைவாகவே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவரது கதைகள் கவிஞனின் தீர்க்கமான பார்வையும், செறிவும், கவித்துவமான கதையாடலும் கொண்டவை." என்று தொடர்ந்து கூறியுள்ள இராமகிருஷ்ணன், ஒரு நல்ல ஓவியனைப் பற்றி `பிரமிள்' எழுதிய `நீலம்' என்ற கதையின் சுருக்கத்தையும் தந்திருக்கிறார். பிரமிளைத் தெரிந்தவர்க்கு அவர் குறிப்பிடும் ஓவியர் அவரே என்பது புலப்படும்.

கதையைப் பற்றிய தம் அவதானிப்பைக் கூறும் இராமகிருஷ்ணன், "நம் வழக்கமான அனுபவத்துக்குள் அடங்காத நிகழ்வுகளை மனம் எப்படி எதிர்கொள்கிறது, மற்றும் பதிவு செய்கிறது என்பது தான் கலையின் செயல்பாடு என்பதைப் பற்றிப் பேசும் இக்கதை, மேற்சொன்ன ஜென் கதைபோல் வாசிக்க வாசிக்க ஆழ்ந்த அனுபவப் பரப்புகளை உருவாக்கிக் கொண்டே போகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

`மழைக்காகக் காத்திருந்தவள்' என்ற பரிசுச் சிறுகதை மூலம் கணையாழியில் அந்த நாட்களில் அறிமுகமாகிப் பிரபலமான இராமகிருஷ்ணனின் பின்னைய காலத் தமிழ்ப் பணிகள் - (கிரியா "தமிழ் அகராதி") மகத்தானவை. அவர் நம்மூர் `தர்முசிவராம்' பற்றி இவ்வளவு புகழ்ந்து கூறக் கேட்க மயிர்க் கூச்செறிகிறது. நம் நாட்டிலேயே இருக்கும் சிவசேகரத்தைப் பற்றியே நம்மூவரில் தெரியவில்லை. தர்முசிவராமுவை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள். (சிவசேகரம் மன்னிப்பாராக.).
_____________________________________________
நன்றி:- தினக்குரல்
Sunday, July 16, 2006

Labels: , ,

வாசித்தளவில், இக்கட்டுரையாளார் எஸ்.ராமகிருஸ்ணனையும், க்ரியா ராமகிருஸ்ணனையும் குழப்பிக்கொள்கின்றார் என்று நினைக்கின்றேன். எஸ்.ராமகிருஸ்ணனே விகடனில் கதாவிலாசம் தொடர் எழுதியிருந்தார்.
.....
க்ரியா ராமகிருஸ்ணன், உயிரிமையில் பத்திகள் தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
.....
இந்த பெயர்க்குழப்பங்கள் குறித்து (ராமகிருஸ்ணன்கள்) எஸ்.ரா -நகுலனின் சுசிலாவை முன்வைத்து -சுவாரசியமான ஒரு பத்தி எழுதியதாயும் நினைவு.

வன்னியன்!

நல்லதொரு இலக்கியவாதி பற்றி பதிவினைத் தந்தமைக்காக நன்றி. தர்மு .சிவராம்பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் வெளிவரவேண்டியவைநிறையவே உண்டு எனக்கருதுகின்றேன்.

டி.சே. நீங்கள் சொல்வது சரியே. கதாவிலாசம் ராமகிருஸ்ணன்வேறு, க்ரியா ராமகிருஸ்ணன் வேறு என்றே நானும் நினைக்கின்றேன்.

எழுதிக்கொள்வது: saravanapavan

தர்மு சிவராம் எனது இளமைக் காலத்து நண்பர். மிகச் சிறந்த ஓவியர். வறுமையிலும் கலையாத இலக்கிய உணர்வை இன்றும் அதிசயத்துடன் நினைத்துப் பார்க்கின்றென். 1970க்குப் பின்னர் என நினைக்கின்றேன் அவiர் சந்திக்கவே முடியவில்லை. அவரை சிலராவது நினைக்கின்றார்கள் என்பது மகிச்சியைத் தருகின்றது.


16.52 19.7.2006

திரு: சரவணபவன் அவர்களே!

நீங்கள் திருமலையைச் சேர்ந்தவரா? தயவுசெய்து கீழேயுள்ள முகவரிக்கு ஒரு மடலிட முடியுமா?

malainaadaan at hotmail.com

எழுதிக்கொள்வது: theevu

எஸ் இரா ஒருமுறை, விகடனில், பிரமிளை காத்திருந்து சந்தித்தது பற்றி எழுதியிருந்தார்.

12.36 20.7.2006

நீங்கள் படப்பிடிப்பாளர் சரவணபவனா? மொழிபெயர்ப்பாளர் சரவணபவனா?

சரவணபவன்,

நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்? :-)
இருந்தால்,

வலைப்பதிவொன்றில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Post a Comment

Get your own calendar

Links