« Home | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். »

ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியாக விளங்கும் வாகனேரிக்குறிச்சியில், சிங்களப் படைகள், பெருமெடுப்பில் திரண்டு - ஊடுருவித் தாக்குதல் நடாத்த முயன்ற இராணுவ நிகழ்ச்சி, சிங்கள அரசின் உண்மை முகத்தைச் சர்வதேச சமூகத்திற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து புலிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் நிழல்யுத்தத்திற்கும் - சிங்களப் படைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றே சிங்கள அரசு கூறிவந்தது. அந்த நிழல் யுத்தம் புலிகளுக்கும் - தமிழ் ஒட்டுக்குழுக்களுக்குமிடையேயான மோதல் என்றே அது சர்வதேச சமூகத்திற்குக் காட்டிவந்தது.

ஆனால், அன்று வாகனேரிப்பகுதியில் நடந்த சண்டையில் சிங்கள இராணுவத்தின் பன்னிரண்டு உடல்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டதும் - சண்டை நடந்த இடம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்று கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியதும் ஒரு முக்கியமான கேள்வியை சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளது. அதாவது, சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு நிராகரித்து விட்டதா! என்பதே அதுவாகும். போர்நிறுத்த சூழலை உடைத்து மீண்டும் போரைத்தொடங்க சிங்கள அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றது என்பதே உண்மையாகும். அதற்காகப் போராளிகள்மீதும் - தமிழ்மக்கள் மீதும் கொலைத் தாக்குதல்களை நடாத்தி புலிகளைச் சீண்டிவருகின்றது. புலிகள் இயக்கமே போரைத் தொடங்கட்டும் என்பதுதான் சிங்கள அரசின் விருப்பமாகும். ஏனென்றால் தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு வழங்கும் எண்ணம் சிங்கள அரசிடமில்லை. இராணுவத்தீர்வு மூலம் தமிழர்களை ஒடுக்குவதே அதனது நீண்டகாலத் திட்டம். சமாதானப் பேச்சுக்கள் தொடராதுவிட்டாலும் சமாதானச் சூழலைப் பாதுகாக்க புலிகள் காட்டும் நீண்ட பொறுமை - விட்டுக்கொடுப்பு என்பன இன்றுவரை பெரும்போரைத் தள்ளிவைத்து வருகின்றது.

புலிகளின் இந்த நீண்ட பொறுமையை உடைக்கவே வாகனேரியில் சிங்கள அரசு பாரியதொரு தாக்குதல் முயற்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த முயற்சியில் சிங்கள அரசு வெற்றிபெற்று - தாக்கவந்த படையினரும் தப்பிச் சென்றிருப்பார்களேயானால், இந்தத் தாக்குதலுக்கும் சிங்களப் படைக்கும் சம்பந்தமில்லை என்று சிங்கள அரசு கூறியிருக்கும். நான்கு - ஐந்து படையினர் கொண்ட சிறுகுழுவாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்திவந்த படையினர் இப்போது பல டசின்கணக்கில் ஊடுருவித்தாக்குதல் நடாத்த முயன்றுள்ளனர். சமாதானப் பேச்சுக்களுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை மகிந்த அரசு களையவேண்டும் என்று சர்வதேச நாடுகளே கோரிவருகின்றன. ஆனால், ஆயுதக்களைவு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிங்களத்தின் சமாதானச் செயலகப் பணிப்பாளரே உறுதிப்படக் கூறிவிட்டார். ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவு என்பது சிங்கள அரசின் இராணுவ நலன்களுக்குப் பாதகமானது என்று சிங்கள அரசு எண்ணுகின்றது. ஒட்டுக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டால் வாகனேரி போன்ற தாக்குதல்களை நடாத்திவிட்டு ஒட்டுக் குழுக்களே செய்தன என்று சர்வதேசத்திற்குப் பொய்கூறுவது சிங்கள அரசிற்குச் சாத்தியமில்லாமல் போய்விடும்.

அதேவேளை, தீர்வுமுயற்சிகள் - அனைத்துக்கட்சி மாநாடுகள், நிபுணர்குழுக்கள்... என்ற சிங்கள அரசின் அரசியல் நாடகங்களும் சர்வதேச சமூகத்தின் முன் அம்பலமாகிவிடும் என்றும் அது அஞ்சுகின்றது. இதனாலேயே ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவுக்கு மகிந்த அரசு விடாப்பிடியாக மறுத்து வருகின்றது. ஒட்டுக்குழுக்கள் அரசியலும் - தீர்வுமுயற்சி நாடகங்களும் இன்றைக்கு மட்டும் நடக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் இவற்றைப் பல்லாண்டுகளாக நடாத்தி வருகின்றனர். இந்தச் சூழ்ச்சி அரசியலைத் தமிழ்மக்கள் முழு அளவில் புரிந்துவைத்திருக்கின்றனர். அதனாலேயே, இன்று தமிழ்மக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி தோன்றியுள்ளது. எனினும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும், குழப்பவுமே ஒட்டுக்குழுக்கள் அரசியலையும் - தீர்வுமுயற்சி நாடகங்களையும் சிங்கள அரசு அரங்கேற்ற முயற்சிக்கின்றது. சிங்கள அரசின் இந்த நயவஞ்சக நோக்கத்தைச் சர்வதேசசமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் புலிகள் இயக்கத்தின் விருப்பமாகும். போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ள இராணுவ அம்சங்களான ஒட்டுக்குழுவின் ஆயுதக்களைவு போன்ற விடயங்களை மட்டும் சிங்கள அரசு உதாசீனம் செய்கின்றது என்றில்லை. உடன்பாட்டிலுள்ள அரசியல் - பொருளாதார அம்சங்களையும் சிங்கள அரசு காலில்போட்டு மிதித்து வருகின்றது. தமிழர் தாயகத்தில் இன்றும் மீன்பிடித்தடை - கட்டுப்பாடுகளை சிங்களக் கடற்படை அமுல்படுத்துகின்றது. எரிபொருட்கள் எடுத்துச்செல்வதை சிங்கள இராணுவம் தடுக்கின்றது. கட்டடப் பொருட்களுக்கான தடையையும் படையினர் அமுல்படுத்துகின்றனர். இதனால், சர்வதேச தொண்டர் நிறுவனங்களளவிலான மனிதாபிமானப் பணிகள்கூட தமிழர் நிலத்தில் தடைப்பட்டுப்போயுள்ளன.

இந்தவகையில் சமாதானகால நன்மைகள் எவற்றையுமே தமிழ்மக்கள் சரியாக அனுபவிக்கவில்லை என்பதே உண்மையாகும். சமாதான காலத்திலும் சிங்கள அரசின் நயவஞ்சகமான இராணுவத் தாக்குதல்களால் தமிழ்மக்கள் அழிவையும் - இடப்பெயர்வுகளையும் - அகதி வாழ்க்கைகளையுமே அனுபவித்துவருகின்றனர். தமிழரின் இராணுவ பலம்தான் தமிழினத்திற்கு நிம்மதியான வாழ்க்கையையும் - நிரந்தரமான தொழில்களையும் - கௌரவமான இருப்பையும் வழங்கும் என்பதே இன்றைய யதார்த்தமாகும். சிங்களத்தின் இராணுவச் சதிகளையும் - அதனுடைய அரசியற் சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு ஒரு நிரந்தர விடுதலைக்காகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் அவசிய தேவையாகும். ஒற்றுமையும் - பலமும்தான் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தாரக மந்திரங்களாகும்.
____________________________________________
நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு -ஆனி, ஆடி 2006.

Labels: , , ,

வன்னி,
பதிவுக்கு மிக்க நன்றி. சிங்கள அரசு கையாளும் உத்திகள் எல்லாம் அமெரிக்கா வியற்னாமில் கையாண்ட உத்திகள் தான். அண்மையில் அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் வியற்னாமிக்கு எதிரான அமெரிக்காவின் இரகசிய யுத்தம் எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அமெரிக்கா வியற்நாமிக்கு எதிராகச் செய்த பல செயல்களை விபரித்திருக்கிறார். இதைப் பற்றி நேரம் கிடைக்கும் போது ஓர் தனிப்பதிவு போடுகிறேன்.

எழுதிக்கொள்வது: belt

//"ஒற்றுமையும் - பலமும்தான் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தாரக மந்திரங்களாகும்."//

சத்தியமான வார்த்தைகள். அதை ஈழத்தமிழர்கள் கடைசிவரை ஒற்றுமையுடன் போராடினால் வெற்றீ நிச்சயம். ஆனால் கருணா போன்ற "உள்குத்து" களால் சிங்களனுக்கு பல பலியாடுகளுக்குமங்கே பஞ்சமில்லையோ?


9.18 21.7.2006

வெற்றி, Belt,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

Get your own calendar

Links