« Home | ஊடகப்பொறுப்புணர்வு » | ஊடகத் தணிக்கை » | உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம். » | சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை » | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி »

சம்பூரும் சமாதானத்துக்கான வாய்ப்பும்.

சமாதான காலத்தில் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் சமாதானம் தொடருவதற்கு வாய்ப்பில்லை



சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது:

திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும்.

வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் கோட்பாட்டின் மையப் பகுதியாக திருகோணமலை உள்ளது. ஆகவே திருகோணமலையின் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு காலம் காலமாக சிங்கள தலைவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

அண்மையில் முடிந்த அரச தலைவர் தேர்தலில் மிக துலாபரம்பாக இது தெரிந்தது. சம்பூர் என்கிற தமிழர் பிரதேசத்தை அகற்றி அங்கே சிங்கள இனப்பரம்பலைச் செய்வது அவசியமாக உள்ளது. அதாவது தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைப்பதற்கான செயற்பாட்டை சம்பூர் மூலமாக நிறைவேற்றலாம் என கருதுகின்றனர்.

சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வடக்கு-கிழக்கில் யுத்த மூலோபாயத்திற்கான திறவுகோலாக இருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. சம்பூர் என்ற பகுதியானது வலுச்சமநிலையில் காத்திரமான பங்காற்றுகின்ற ஒரு இடம். அத்தகைய ஒரு கேந்திரத்தை அரசாங்கம் கைப்பற்றுவதன் மூலமாக வலுச்சமநிலையை தனக்குச் சார்பாக மாற்றி வைத்துள்ளது.

இராணுவ அரசியல் கேந்திரமாக உள்ள சம்பூர் என்கிற ஒரு குறுகிய பகுதியைக் கைப்பற்றுவதை அக்கறைக்குரிய விடயமாக இந்த சமாதான காலத்தில் கையாண்டு வந்துள்ளனர். அதனால்தான் எங்கு ஒரு சம்பவம் நடந்தாலும் அதனை ஒரு முகாந்திரமாக வைத்துக் கொண்டு சம்பூர் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாக வைத்திருந்தனர். கொழும்பிலோ யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எங்கோ ஒரு இடத்தில் தாக்குதல் நடந்தாலும் அதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு புலிகள் மீது பழியைப் போட்டு சம்பூரில்தான் தாக்குதல் நடத்தியது சிறிலங்கா இராணுவம்.

ஏனெனில் இராணுவ- அரசியல் கேந்திரத்தில் சம்பூருக்கான பாத்திரத்தை அகற்றுவதுதான். தற்போதைய நடவடிக்கை மூலம் வலுச்சமநிலையை சீர்குலைத்துள்ளது. இது யுத்த நிறுத்தத்தின் எதிர்காலத்தையும் சமாதானத்தின் எதிர்காலத்தையும் அறவே அகற்றிவிட கூடியதாகும்.

இதுவரை காலம் நடந்த நிகழ்வுகளுக்கும் சம்பூர் இராணுவ நடவடிக்கைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்ட எல்லைகளுக்குட்பட்டுத்தான் இதுவரையான நிகழ்வுகள் நடந்தன. அந்த எல்லைகளை உடைத்து மீள் நிர்மாணம் செய்யக்கூடிய எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை.

ஆனால் இந்த நடவடிக்கையின் அடிப்படையே வேறுபாடானது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ள இருதரப்பு கட்டுப்பாட்டு எல்லையை மீள் நிர்மாணம் செய்கிற அரசாங்கத்தின் முயற்சி இது.

மகிந்த ராஜபக்ச ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை உள்ளது என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளார்.

அத்தகைய பொருளாதர நெருக்கடியிலிருந்து தன்னை மீட்டெடுப்பதற்கு இணைத் தலைமை நாடுகள், சர்வதேச சமூகம் மற்றும் அதில் உள்ள சக்திமிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். அத்தகைய ஆதரவைப் பெறாமல் மகிந்தவால் ஆட்சி நடத்த முடியாது.

அத்தகைய ஆதரவும் அனுமதியும் எப்போது கிடைக்குமெனில் இணைத் தலைமை நாடுகளின் விருப்புகளுக்கு ஏற்ப மகிந்த ஒத்துழைத்தால்தான் கிடைக்கும்.

மகிந்தவின் தேவையானது சம்பூரைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவது. ஆகவே சம்பூரை மகிந்த கைப்பற்றுவது என்றும் சம்பூரைக் கைப்பற்றுவதற்காக இணைத் தலைமை நாடுகள் மெளனம் சாதிக்க வேண்டும் அல்லது ஆதரவளிக்க வேண்டும் அல்லது ஒத்துழைக்க வேண்டும் என்கிற பேரம் நடைபெறுகிறது.

இதற்காக மகிந்தவுடன் இணைத் தலைமை நாடுகள் சில உத்தரவாதங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம்.

சம்பூரை ஆக்கிரமித்த பின்னர்- செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியான எல்லைகளையே கேள்விக்குறியாக்கிய பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் என்பது தொடரப்படவோ முன்னெடுத்துச் செல்வதற்கோ வாய்ப்புகள் என்பது கேள்வியை உருவாக்கி உள்ளது.

சமாதானம் தொடர்பிலான உத்திரவாமானது தமிழர் தரப்பில் பாரிய கேள்வியாக உள்ளது.

திருகோணமலையானது சர்வதேச துறைமுகமாக மட்டும் இல்லை. அங்கு சிறிலங்கா கடற்படைத் தளம் உள்ளது. அந்தக் கடற்படை தளமானது வடக்கு-கிழக்கு கடலாதிக்கத்தின் மையமாக உள்ளது. அந்த மையத்திலிருந்து தங்களது பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் அத்தளம் மீது ஒரு முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

சம்பூரை நோக்கி விமான தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்தியதால் பதில் தாக்குதலை புலிகள் நடத்தினர்.

சர்வதேச துறைமுகத்தையும் தங்களது கடற்படை தளத்தையும் இணைத்து வைத்திருப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் தவறு.

சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமானத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கியபோது அதிகூடிய விழிப்புணர்வோடுதான் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தாக்குதலை நடத்தினர்.

சம்பூரிலிருந்துதான் திருகோணமலை துறைமுகத்துக்கு புலிகளால் அச்சுறுத்தல் என்பது அல்ல.

திருகோணமலை துறைமுகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ- தாக்குதல் நடத்தவோ- அச்சுறுத்தவோ விடுதலைப் புலிகளுக்கு வேறு மார்க்கம் உண்டு. விடுதலைப் புலிகளிடம் வலுவான கடற்படை உள்ளது. தரைப்படையும் உள்ளது. விடுதலைப் புலிகள் தங்களது முப்படையையும் பாவித்து அத்தகைய தாக்குதலைச் செய்யும் வல்லமை உண்டு.

எனவே சம்பூர் இருப்பதனால்தான் திருகோணமலைக்கு அச்சுறுத்தல் என்பது ஒரு விதண்டவாதம்.

கட்டுநாயக்க விமான தளத்தைப் புலிகளால் தாக்க முடியுமெனில் வடக்கு-கிழக்கில் உள்ள இத்தகைய துறைமுகத்தை தங்களது மூன்று படைகளால் புலிகளால் தாக்க முடியும்.

தற்போது நடைபெற்று வருபவை மோதல்கள்-சண்டைகள். சமாதான ஒப்பந்தம் இன்னும் சிதைந்து போகவில்லை. அதைக் கடந்து ஒரு யுத்தம் உருவாகவில்லை.

யுத்தம் என்று வரும்போதுதான் வலுச்சமநிலையைக் கண்டறிய முடியும். சமாதான ஒப்பந்தத்தின் கீழ்தான் இப்போது மோதல்கள்- சண்டைகள் நடைபெறுகின்றன. ஒரு முழு அளவிலான யுத்தம் வருகின்ற போதுதான் யுத்தத்துக்கான உபாயங்களைப் பிரயோகிக்க முடியும்.

தமிழீழத்தை அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை- தந்திரோபாயத்தை புலிகள் பயன்படுத்துகின்ற வாய்ப்பானது யுத்த நிறுத்தத்தைக் கடந்து யுத்தம் ஏற்படும்போதுதான் ஏற்படும். தற்போதைய மோதல்களிலோ- சண்டைகளிலோ வலுச்சமநிலையை பரிசோதிக்க முடியாது. அதை நிரூபிக்கவும் முடியாது. எதிர்பார்ப்பதும் தவறானது.

யுத்தம் என்று ஒன்று வருமேயானால் அதனில் நிரூபிக்கலாம். யுத்தத்தில்தான் அதனை எதிர்பார்க்க முடியும். நான்கரை வருட காலமாக சமாதானத்தில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். நீண்டகால யுத்தத்தில் இருந்த மக்களை ஒரு சமாதானத்துக்கு புலிகள் தயார்படுத்தினார்கள்.

விடுதலைப் புலிகள் மேற்கொள்ளுகிற எத்தகைய ஒரு சமாதான சூழலுக்கும் உடன்படக்கூடிய மனப்பாங்கு மக்களிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய மனப்பாங்கு கொண்ட மக்கள் பாரிய ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே யுத்தத்துக்கு போகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

யுத்தம் என்பது வருவதற்கு முன்பாக சர்வதேச சமூகத்தில் சில சாதகமான நிலைகளை அடைய வேண்டியதுள்ளது.

யுத்தத்துக்கு சார்பான தேசிய எழுச்சியானது தளத்திலும் புலத்திலும் தார்மீக ஆதரவளிக்கும் சர்வதேச சமூகத்திலும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் யுத்த நிறுத்த எல்லைகளைக் கடந்து யுத்தம் வெடிக்க இயலும். அத்தகைய யுத்தமானது புலிகளின் வலுச்சமநிலையை வெளிப்படும்.

மக்கள் இந்தப் போரின் பங்காளிகள். இறுதிவெற்றியை நோக்கி இந்தப் போராட்டம் நகருகின்ற போது இறுவெற்றிக்கான பண்பு மாற்றத்தையும் அடைய வேண்டும். விடுதலைப் போராட்டம் என்கிற பரிமாணமானது அடுத்த கட்டமான தேசியப் போராட்டம் என்கிற பரிமாணத்தை அடைய வேண்டும். மக்கள் மயப்பட்ட போராட்டமாக மாற வேண்டும். அத்தகைய எழுச்சியானது யுத்தத்துக்கு முன்னர் நிகழ வேண்டியது மிகவும் அவசியமானது என்றார் கவியழகன்.


நன்றி: புதினம்.

Labels: , , ,

எழுதிக்கொள்வது: ஈழபாரதி

நல்லதொரு ஆய்வு, நாலாம்கட்ட ஈழப்போரின் காரணியாக சம்பூர் இருக்கப்போகிறது. ராணுவம் பழைய நிலக்குத்திரும்பாமல் பேச்சுவார்த்தை சாத்தியமற்றது.

16.38 5.9.2006

வன்னி,
உங்களின் முன்னைய பதிவொன்றில் நான் ஏற்கனவே சொல்லியிருந்த விடயம் என்னவென்றால், புலிகள் இப்போது யுத்தத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்பது. ஆக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை மட்டுமே நடாத்துவார்கள். காரணம் புலிகள் ஓர் இலக்கை வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளை அந்த இலக்கிலிருந்து திசைதிருப்புவதற்காக சிங்கள அரசு பல இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தமிழினப் படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்ட போதும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி முழுஅளவிலான யுத்தத்தை தவிர்த்தே வருகிறார்கள்.

//யுத்தம் என்று வரும்போதுதான் வலுச்சமநிலையைக் கண்டறிய முடியும். சமாதான ஒப்பந்தத்தின் கீழ்தான் இப்போது மோதல்கள்- சண்டைகள் நடைபெறுகின்றன. ஒரு முழு அளவிலான யுத்தம் வருகின்ற போதுதான் யுத்தத்துக்கான உபாயங்களைப் பிரயோகிக்க முடியும்.

தமிழீழத்தை அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை- தந்திரோபாயத்தை புலிகள் பயன்படுத்துகின்ற வாய்ப்பானது யுத்த நிறுத்தத்தைக் கடந்து யுத்தம் ஏற்படும்போதுதான் ஏற்படும். தற்போதைய மோதல்களிலோ- சண்டைகளிலோ வலுச்சமநிலையை பரிசோதிக்க முடியாது. அதை நிரூபிக்கவும் முடியாது. எதிர்பார்ப்பதும் தவறானது.//

சம்பூரைக் கைப்பற்றுவதன் மூலம் ராஜபக்ஷவுக்கு தென்னிலங்கையில் குறுகியகால அரசியல் வெற்றி என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால் முழுஅளவிலான யுத்தம் வரும் போது நிலமை மாறலாம்.

பி.கு:- சம்பூரைக் கைப்பற்றியதென்ற செய்தி வெளியானவுடன் ராஜபக்ஷவை விட தமிழமணத்தில் எழுதும் சில தமிழின விரோதிகளே மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிகிறது. இப்படித்தான் 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சிங்கள அரசு கைப்பற்றிய போது இந்த தன்மானமற்ற பேர்வழிகள் தலைகால் தெரியாமல் குதியன் கொட்டினவை. இனிமேல் புலிகளால் எழவே முடியாது என மார்புதட்டித் திரிஞ்சவை. இவையளை நினைச்சால் சிரிப்புத்தான் வருது.

ஈழபாரதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இன்று சம்பூரை நிபந்தனையாக்காமல் பேச்சுக்குச் செல்ல புலிகள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அவரவர்க்கு அவரவர் அரசியல் விருப்பங்கள்.
புலியின் தோல்வியில்தான் தமிழருக்கு விடிவு வருமென்று இன்னமும் நம்பிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பலர் இருக்கிறார்கள்.
நாங்கள் தோற்கும்போது அவர்கள் மகி்ழ்வார்கள், நாங்கள் வெல்லும்போது அவர்கள் அழுவார்கள், நாங்கள் மகிழ்வோம்.

Post a Comment

Get your own calendar

Links